(Reading time: 9 - 17 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 14 - ஜெய்

மைத்தி உணர்ச்சிகரமாக பேசிவிட்டு ஏதேனும் எதிர் விளைவுகள் இருக்கிறதா என்று பார்க்க, இன்னும் தாத்தாவும், பாட்டியும் கடுகடுவென்றே இருந்தனர்....

“பேசி முடிச்சாச்சா.... நீ சொல்றது எல்லாம் சரிதான் மைத்தி.... உன்னோட உழைப்பையோ, ஆசையையோ நாங்க தப்புன்னு சொல்லலை... ஆனா அந்த ஆசையை அளவோட படுன்னுதான் சொல்றோம்... நம்மாத்துக்கு எனது ஒத்து வரும்ன்னு யோசிச்சு பண்ணுன்னுதான் சொல்றோம்... இந்த விளையாட்டெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு... இதோ அடுத்த வருஷம் நீ பத்தாங்க்ளாஸ் போய்டுவ... அதுக்கப்பறம் படிப்புலதான் உன்னோட முழு கவனமும் இருக்கணும்... இந்த விளையாட்டெல்லாம் மூட்டை கட்ட வேண்டியதுதான்...” , சுப்பிரமணியம் தாத்தா அவருக்கு சரியென்று தோன்றிய நிதர்சனத்தை கூறினார்...

“இல்லை தாத்தா... என்னோட எதிர்காலம் கிரிக்கெட்தான்... நான் விளையாடினாலும் நன்னா படிப்பேன்... ஆனா கண்டிப்பா என்னால் எத்தனை வருஷம் முடியுமோ அத்தனை வருஷம் விளையாடுவேன்....”

“சொன்னா புரிஞ்சுக்கோடி குட்டி.... நம்மாத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது... ஏற்கனவே உறவுக்காறாலாம் மைத்தி ஏதோ கிரிக்கெட் எல்லாம் விளையாடறாளாமேன்னு கேக்க ஆரம்பிச்சுட்டா.... சின்ன வயசு அதனால ரொம்ப கேக்கலை... நீ இப்படியே இருந்தேன்னா நாளப்பின்ன நோக்கு மாப்பிள்ளை தேடறது எத்தனை கஷ்டம்ன்னு தெரியுமா....”

“பாட்டி இந்த கேள்வி கேக்கறவா நமக்கு கஷ்டம்ன்னு வர்றப்ப எத்தனை நாளைக்கு வந்தா... யாரோ கேக்கறானெல்லாம் என் கனவை நீங்க நிறுத்த சொல்றது அநியாயம் பாட்டி....”

“ஏண்டி நாம என்ன யாரும் இல்லாத தனித் தீவுலையா இருக்கோம்... உறவு, நட்புன்னு நம்மளை சுத்தி இருக்கறவாளோட ஒத்துப்போய்த்தான் வாழணும்... ரொம்ப சுலபமா சொல்லிட்ட... மத்தவா பேசறதையெல்லாம் கணக்குல எடுத்துக்கக் கூடாதுன்னு....”

“பாட்டி மத்தவாளோட ஒத்துப்போகணும்... கரக்ட்தான்... அவா அனாவஸ்யமா நம்ம வாழ்க்கைல மூக்கை நுழைக்காத வரை....”, மைத்தி தனியாக வாதாடுவது பொறுக்காமல் நடுவில் நுழைந்தான் பத்ரி....

“பத்ரிண்ணா நீ இரு.... நானே பேசிக்கறேன்....”

“இந்தாத்துலதான் இப்படி பெரியவாள மதிக்காம பேசறதெல்லாம் நடக்கும்...”,பாட்டி புலம்பினாள்...

“பாட்டி சத்தியமா உங்களை மதிக்காம இல்லை பாட்டி.... ரெண்டு வருஷமா நான் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன்... நீங்க அதை ஒரு பெர்சென்ட் கூட புரிஞ்சுக்காம பேசறேளேன்னு ஆதங்கம்...”, நேரம் ஆக ஆக கீழிருந்து சத்தம் அதிகமாக வர காமாட்சி பாட்டி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.