Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 18 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Vennilavu enakke enakka
Pin It

தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 18 - Chillzee Story

I can’t do everything, but I will do anything for YOU…

ரீஷ் வேலையில் ஆழ்ந்துப் போயிருந்தான். அவன் செய்துக் கொண்டிருந்த வேலையை சீக்கிரம் முடித்து வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனின் இதயம் கட்டளைப் போட்டுக் கொண்டு இருந்தது.

அலுவலகம் வந்தது முதல் ஒருவர் மாற்றி ஒருவர் நேரில், போனில், மெசெஞ்சரில், ஈமெயிலில் என வாழ்த்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு தடவையும் நிலாவின் ஞாபகம் அவனின் மனதை மயிலிறகாய் வருடிப் போனது.

அதென்னவோ அவள் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது.

இதற்காக தான் கல்யாணம் ஆன உடனே ஹனிமூன் போகிறார்கள் போல இருக்கிறது. அம்மா கேட்டப்போதே ஒழுங்காக எங்கேயாவது போயிருந்திருக்கலாம்.

எரிச்சலுடன் கீபோர்டில் வேகமாக அடித்தான்.

“பார்த்துப்பா. உன் கஷ்டம் எங்களுக்குத் தெரியுது. அந்த கீபோர்டுக்கு தெரியுமா? உடைஞ்ஜிடப் போகுது” – பக்கத்து சீட் மயில்வாஹனன் ஹரீஷ் க்யூபில் எட்டிப் பார்த்து சொன்னான்.

ஹரீஷுக்கு சிரிப்பு தான் வந்தது.

எப்படியோ வேகமாக வேலையை முடித்துக் கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

வீட்டில் மஹாலக்ஷ்மியும் நிலாவும் அவனை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.

“நீயும், அப்பாவும் எப்போ வருவீங்கன்னு நாங்க பார்த்துட்டு இருந்தோம். நீ முதல்ல வந்துட்ட வா, உனக்காக நாங்க ஸ்பெஷலா ட்ரீட் வச்சிருக்கோம்” – மஹா

“என்னம்மா பயமுறுத்துறீங்க?” – ஹரீஷ்

“பயமுறுத்தலை ஹரீஷ். நானும் அத்தையும் யூ ட்யூப் பார்த்து பீட் ரூட் அல்வா செய்தோம். நாங்க செய்து நாங்களே சாப்பிட்டா எப்படி. அதான் உங்களுக்கு தரோம்.”
 - நிலா பீட் ரூட் அல்வா இருந்த கிண்ணத்தை ஹரீஷ் முன் வைத்தாள்.

ஹரீஷின் தலையில் ரெட் அலர்ட் சைரன் சத்தமாக ஒலித்தது. அல்வா பார்க்க அல்வா மாதிரியே தான் இருந்தது. இருந்தாலும் என்னவோ அவனை பயமுறுத்தியது.

“எனக்கு இப்போ வேண்டாமே. நான் அப்புறமா சாப்பிடுறேன்” – ஹரீஷ்

“என்ன ஹரீஷ் நீ. நிலா ஆசை ஆசையா சாப்பிடுன்னு சொல்றா. எடுத்து சாப்பிடு. எப்படி இருக்குன்னு சொல்லு” – மஹா

தப்பிக்க வழி இல்லாமல் ஸ்பூனில் கொஞ்சோண்டு அல்வாவை எடுத்து வாயில் வைத்தவன், நொந்துப் போனான்!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Popular stories in Chillzee KiMo

  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Unnai kan thedutheUnnai kan theduthe
  • Vetri'yin SelviVetri'yin Selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 18 - Chillzee Storyvanaja 2020-09-25 01:38
asathal epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 18 - Chillzee StorySabariraj 2020-09-24 18:19
ஹீரோ அய்யோ பாவம்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 18 - Chillzee StoryAdharvJo 2020-09-24 12:42
Thitta kudadhunu pakurangalame...ana mudiyalam 😍😍😍 appadi en panitaru harish 😁😁 pavam he one....vai-illa poochi 😂😂😂 as always lovely and lively update ma'am 👏👏👏👏👏👏👏
Chillzee series la suravaliya :eek: :eek: sweet suravali thanunga 😍😍
Nila, harish oda interest towards her purinji than ippadi ethum theriyadha mathiri act panurangalo??? Innum evalo direct ah avaruoda manasai express panuradham😈 look forward to see what happens next. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 18 - Chillzee StorySadhi 2020-09-24 09:28
Chillzee team weekly once update kudunga pa
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 18 - Chillzee Storymadhumathi9 2020-09-24 06:44
:grin: cute epi (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top