(Reading time: 13 - 26 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"ஸோ  சேட் பா…  நீங்க உங்க தப்புக்கு பயந்து அவங்களுக்கு தண்டனையை கொடுத்து இருக்கீங்க. இதில் அவங்களோட மனநிலை என்னன்னு நீங்க கவனிச்சீங்களா?"

 

"அவ என்ன மன்னிக்கவே இல்லாம்மா.. கல்யாணம் ஆனால் கூட நாங்க விலகிதான் இருந்தோம். அவள் உனக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாள். ஏன்னா நீ ரொம்ப சின்ன குழந்தையாய் இருந்ததுனால உன்னை  காப்பாற்றும் பொறுப்பு அவளுக்கு இருக்குன்னு நினைச்சு கல்யாணம் பண்ணாள். ஏன்னா ஃபெலிக்ஸும் வசுமதியும் பழகுனது அவளுக்கு தெரியாமல் இருந்ததை அவளுடைய பக்க தவறாக நெனச்சாள். அவர்கள் ஓடிப் போகாமல் இருந்திருந்தால் உனக்கு சித்தப்பா சித்தியின்  ஆதரவு கிடைச்சிருக்கும். தனித்து இருந்திருக்க மாட்டேனு நினைத்தாள்…"

"புரியுதுப்பாஇப்போது சித்தப்பா எங்க இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா?. அவரை நீங்க அதுக்கு அப்புறம் பார்த்தீங்களா?. அவருக்கு குழந்தைகள் எல்லாம் இருக்கா?" என்று அவள் ஆர்வமாக விசாரித்தாள்.

"இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியாது. மதுரை பக்கம்தான் இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கடைசியா அவன் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தான். அதுல அவனுக்கும் உன்னை மாதிரி ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறதை பார்த்தேன். அவளும் உன்னை மாதிரியே ரொம்ப அழகாயிருந்தாள்" என்று சிரித்தவாறு அவர் சொன்னார்.தொடர்ந்து...

" இந்நேரத்துக்கு அவளும் வளர்ந்து இருக்கலாம். யார் கண்டது கல்யாணம் கூட நடந்து இருக்கலாம். அவளுக்கு குழந்தைகள் கூட இருக்கலாம்" என்று அவர் பேசிக்கொண்டே சென்றார்.

"சரிப்பா நம்ம கடந்த கால தவறுகளை இனிமேலாவது சரிசெய்ய பார்ப்போம். நமக்கு இருக்கிற சொந்த-பந்தங்களை தேடி கண்டுபிடிச்சு நம்ம ஒண்ணா இருக்கணும். அதுதான் நல்லது. இப்ப பாட்டியும் இல்லை. அதனால நாம சித்தப்பா சித்தியை தேடலாம். அவங்க குடும்பத்தோட எங்கே இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கலாம்" என்று சொன்னாள்.

"சரி நீ கொஞ்சம் தூங்கி ஓய்வெடு  மதுரை வரவும் எழுப்பறேன்." என்று ரேச்சலை கால் நீட்டி படுக்க வைத்தார்.

மதுரையை அடையவும் ரேச்சலை எழுப்பி காபி வாங்கி தந்தார்.

"இங்கேதான் எங்கேயோ சித்தப்பா ஃபேமிலி இருக்கு. அப்படிதானேப்பா"

"சீக்கிரம் தேடி கண்டு பிடிக்கறேன் டியர்." என்று சமாதானமாக மேத்யூஸ் சொன்னார். பேருந்து

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.