(Reading time: 20 - 40 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

தொடரை தொடங்குவதற்கு முன் கடந்த வார பகுதியை  தர இயலாமல் போனதற்காக வாசகர்களிடம் மன்னிப்பை கோருகிறேன். எந்த தடையும் இல்லாமல் வரும் வாரங்களில் தொடரை தர முயற்சிக்கிறேன். நன்றி!

ந்த மாலை நேரம் காற்று சில்லிப்புடன் அவனை வருடி சென்றது. சுற்றி இருந்த மரங்களில் பறவைகள் கூட்டமாக அவரவர் குடும்பத்துடன் தங்களின் கூட்டிற்கு திரும்பி கொண்டிருந்தது. அந்த பால்கனியை ஒட்டியிருந்த மாமரத்தில் நிறைய பச்சைக்கிளிகள் கீச்சிட்டு கொண்டிருந்தது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரம்மியமாக இருந்தது. மனதிற்குள் ஏதேதோ யோசனைகள் ஓட பால்கனியில் நின்றிருந்தான் ராம்.

மெல்ல அந்த அறையின் கதவை சத்தம் வராமல் திறந்தாள் தமிழ்செல்வி.  அறையில் மெல்லிய விளக்கொளியில் கட்டிலை பார்த்தாள். அங்கு ராமை காணவில்லை. உள்ளே வந்தவள் அறையை  சுற்றும் முற்றும் பார்த்தாள். பால்கனியில் தெரிந்த வெளிச்சம் அவன் அங்கு இருப்பதை சொல்ல, மெல்ல பால்கனியை நோக்கி சென்றாள். அவளின் காலடி சத்தத்தில் திரும்பியவனின் அருகே வந்தவள் "சாரி வக்கீல் அங்கிள் கொஞ்சம் டிலே பண்ணிட்டார். நீங்க சாப்பிட்டீங்களா?" எங்கே இங்கு வந்ததில் இருந்து அவனை கண்டு கொள்ளாமல் இருப்பதோடு அவனோடு கலந்தாலோசிக்காமல் பெரிய முடிவை வேறு எடுத்திருக்கிறாளே என்று கோபம் கொள்வானோ என்ற யோசனையுடன் கேட்டாள்.

"இட்ஸ் ஓகே. லீகல் ப்ரோஸஸ்னா கொஞ்சம் முன்ன பின்ன ஆகும். நோ ப்ரோப்லேம்" அவனோ அவள் எதிர்பார்த்ததுக்கு மாறாக ஆறுதலான தொனியில் பதில் சொல்லவும், அவன் கோபமாக பேசினால் அதற்க்கு ஏற்ப பேசுவதற்கு தயாராகி வந்தவளுக்கு இப்போது என்ன பேசுவது என புரியவில்லை.

"நான் உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணாம இந்த ப்ரோபெர்டி எல்லாம் சித்திக்கும் நந்துக்கும் ட்ரான்ஸபெர் பண்ண சொல்லிட்டேன். சாரி" அவள் மீண்டும் ஒரு மன்னிப்பை வைக்க, "இதுல சாரி சொல்ல என்ன இருக்கு. இது எல்லாம் உன் அப்பா உனக்கு கொடுத்தது. அதை என்ன பண்ணனும்னு நீ தான் டிசைட் பண்ணனும். இதுல என்கிட்டே டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கு?" மீண்டும் அவன் அவள் எதிர்பாராத வைகையில் பதில் சொல்ல, அவள் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தபடி நிற்க, "ஹ்ம்ம்... தமிழ்  உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..." இம்முறை தயங்கியபடி கேட்டான் ராம்.

"சொல்லுங்க..." அவனின் தயக்கத்தை உணராதவள் கேட்கவும் எப்படி ஆரம்பிப்பது என ராம்

21 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.