(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 06 - ஜெபமலர்

பொழுது விடிந்தது...

ஜனார்த்தனன் தன் செல்ல மகள் தன்ஷிகாவை அழைத்துக்கொண்டு ஸ்வீனாவை பார்க்க அலுவலகத்துக்கு சென்றான்.

அங்கு வேலைகளில் ஸ்வீனா பிஸியாக இருக்க அவளைக் கண்டு எதையும் பேச முடியவில்லை. அவனுக்கும் வேலைகள் இருக்க ஒவ்வொன்றாக முடித்தாலும் அவன் மனதில் என்னவோ ஜனனி மட்டுமே முழுவதுமாக குடியேறி இருந்தாள்.  அவளின் நினைவுகளே அவனை ஆக்கிரமித்திருந்தது.

அவளைப் பற்றி யோசித்து கொண்டிருந்த அவனுக்கு முதல் நாள் அவளை சந்தித்த ஞாபகம் வந்தது. அவனை அறியாமலேயே அவன் உதடுகள் ஸ்வேதா என்று உச்சரித்தது.

 ஸ்வேதா என்ற பெயரை உச்சரிக்கும் பொழுது அவன் முகத்திலும் அப்படி ஒரு மலர்ச்சி தோன்றியது. அதை அஸ்வித் கவனித்தும் கவனிக்காதது போல தன் வேலையிலேயே தீவிரமாக இருந்தான். சில நேரம் ஆழ்ந்த யோசனையே சிறந்த வழியை அறிய உதவும் என்று நினைத்து அவன் ஜனார்த்தனனிடமிருந்து சற்று ஒதுங்கியே இருந்தான்.

அவனுக்கு ஜனனியை முதல் நாள் சந்தித்தது நினைவு வந்தது. ஸ்வேதா தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஒரேடியாக ஒதுக்கி விட அதை அறிந்தவன் அவளை பலமுறை சந்தித்தும் தோல்வியில் முடிந்தது. அவளுக்கு திருமணம் என்று கேள்வி பட்டதும் நன்கு குடித்துவிட்டு அவளைப் பார்ப்பதற்காக அவள் புதிதாக கட்டும் மாலிற்கு சென்றிருந்தான். 

அந்த நேரத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி ஒரு நிலையில் ஸ்வேதா அவனை தள்ளி விட்டு அவளுடைய காரில் பறந்து சென்றதும் நினைவு வந்தது.

 அவன் கீழே விழாமல் தாங்கி பிடித்தது ஜனனி தான் என்ற நினைவும் வந்தது. அதோடு முதல் நாளில் முதல் பார்வையிலேயே அவன் அவளை திட்டிய வார்த்தைகளும் நினைவு வந்தது. அவனுக்கு சற்று வருத்தமாக இருந்தது. முன்னே பின்னே தெரியாதவளை அதுவும் தனக்கு உதவி செய்த வந்தவளை இந்த அளவு திட்டிவிட்டோமே என்று யோசித்தவன் ஒருவேளை இதுவும் அவளது நாடகமாக இருக்குமோ என்று தோன்ற சற்று குழம்பிப் போனான். ஆனால் அவளது விழிகள் அன்று ஏதோ ஒன்றை உணர்த்தியதே என்று யோசித்தவன் அவள் பலகாலம் என்னை பார்த்தவள் போல ஒரு பார்வை பார்த்தாலே அந்த பார்வையின் ரகசியம் என்ன என்று யோசித்தான். அவனுக்கு விடை கிடைக்கவில்லை. அவள் பார்த்த நொடிகள் ஒரே நொடிதான் எனினும் அவளது அந்தப் பார்வையில் ஆச்சரியம் கலந்து இருந்தது.

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.