(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

மருத்துவமனையில் கோமோவில் சிகிச்சை பெறும் தாயிடம் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கும் தன்சிகாவை சமாதானம் செய்து, பிஸினஸையும் கவனித்து கொண்டு, எதையும் கண்டு கொள்ளாமல் போதையே உலகம் என்று கவலையை மறக்க குடித்து கொண்டே இருக்கும் ஜனாவையும் கவனித்து அவனுக்கு நிலமையை புரிய வைத்து ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஸ்வீனா பெரும் பாடு பட்டாள்.

இதற்கிடையே கோமோவில் இருந்து நினைவு திரும்பாமலே அவள் மரித்து விட குழந்தையாக இருந்த தன்சிகாவின் கதறலை கேட்ட பிறகு தான் ஓரளவு விழித்து கொண்டான் ஜனா. தகப்பனாய் தாயாய் தன்சிகாவை நன்றாக பார்த்து கொண்டான் ஜனா. ஆனாலும் அவன் உள் மனது வெறுமையில் உழன்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அறிமுகமானவள் தான் ஸ்வேதா. தனி மரமாக துவண்டு கொண்டு இருந்தவனுக்கு துணையாய் ஆறுதலாக வந்து சேர்ந்தாள். ஆனால் அவளிடம் தன்சிகா பற்றி சொல்ல மறந்து போனான் ஜனா...

மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை ஆனால் சொல்லவில்லை... சொல்ல மறந்த இந்த கதை பின்னர் பெரிய பிரச்சினையாக பூதாகரமாகும் என்று அவன் நினைக்கவில்லை.

ஸ்வேதா ஜனா இருவரும் நல்ல நண்பர்களாக மாறி இருந்தனர். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப ஒரு நிலையில் ஸ்வேதா அவனை காதலிக்க தொடங்கி இருந்தாள்.

அவள் ஜனாவிடம் காதலை சொல்ல அவனோ என்ன செய்வது என்று தடுமாளனறினான். தன்சிகா பற்றி எதுவும் சொல்லாதது உரைத்தது. ஆனால் ஸ்வேதாவின் அன்பை விலக்கவும் அவனால் முடியவில்லை.

அவனுக்கும் அவள் அன்பு தேவையாக இருக்க அவளின் காதலை ஏற்றுக் கொண்டவன் ஒரே வாரத்தில் அவளின் முன் தன்சிகாவை நிறுத்தி இவள் என் பொண்ணு... என்று முழு உண்மையையும் சொல்ல ஸ்வேதா தடுமாறி போனாள்.

உண்மையை மறைத்ததற்காக அவனிடம் கோபமும் கொள்ள முடியாமல் அவனை மறக்கவும் முடியாமல் தவித்தாள் ஸ்வேதா.

பதில் ஏதும் கூற இயலாமல் ஜனாவை பார்ப்பதை தவிர்த்தாள் ஸ்வேதா.

ஆனால் ஜனாவோ தன் மீது உள்ள அன்பில் தன் பெண்ணையும் தன்னையும் ஏற்றுக் கொள்ளவாள் என்று தப்புக்கணக்கு போட்டு தன் அன்பை புரிய வைக்க முயற்சி செய்தான்.

அன்பு என்பது ஒரு உணர்வு.. தானாக வர வேண்டும், எதிர்பார்ப்பு இல்லாமல் வருவது தான் அன்பு... பரிபூரணமான அன்பு நேசிப்பவருக்காக எதையும் செய்ய துணியும்... ஆனால் அந்த அன்பில் சிறு கீரல் ஏற்பட்டாலும் வாழ்விற்கு உதவாது என்பதை அறிய தவறி விட்டான்

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.