(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

 ஏனோ தான் சந்திக்கப் போவதில்லை என்று அறிந்த ஒருவரை மீண்டும் சந்திக்கும்போது ஏற்படுமே ஒரு ஆர்வம் கலந்த ஆச்சரியம்... அந்த ஆச்சரியம் அவளது கண்களில் நிறைந்து இருந்தது அவனுக்கு உறைத்தது.

 அப்படி என்றால் என்னை அவளுக்கு முன்பே தெரியுமா, என்னை அவள் அவ்வாறு பார்த்து வைத்தாள். நான் வேறு அவளை நன்கு திட்டி விட்டேனே என்று யோசித்தவனுக்கு சற்று கவலையாக இருந்தது. ஆனாலும் அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்று மனம் அடித்து சொன்னது.

 எது எப்படியோ போகட்டும். என் பொண்ணை நன்றாக பார்த்துக் கொண்டவள் என் தனு குட்டியின் மனதில் ஒரு இடத்தை பிடித்திருப்பவள்... அவளை மனம் நோகும்படி செய்துவிட்டேனே... இனி கவனமாக இருக்க வேண்டும் என்று யோசித்தவன் முன் தினம் இரவில் அவளை பார்த்த நினைவு வந்தது‌.

 உண்மையிலேயே பேரழகிதான் அவள்... ஆனால் ஏன் மற்ற நேரங்களில் அவள் இவ்வாறு தன்னை அலங்கரித்து கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. தன் அழகை குறைத்து காண்பிக்க வேண்டும் என்றே அவள் அவ்வாறு உடுத்தி இருக்கவேண்டும். அவளது நடை உடை பாவனைகள் எல்லாவற்றையும் மாற்றி இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு அவள் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று பல கேள்விகள் அவனுக்கு எழுந்து கொண்டிருக்க அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

 ஒரு பக்கம் அவன் வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் ஏனோ ஜனனி நிறைவே அவனை வாட்டி எடுத்து கொண்டு இருந்தது. இத்தனை நாள் ஜனனி மீது இருந்த கோபம் வருத்தம் தவறான அபிப்ராயம் எல்லாம் மாறிப் போயிருந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் முதல் நாள் அவளை திட்டியதற்கான வருத்தம் அவனிடம் மேலோங்கி இருந்தது என்பது நிச்சயம். இனி அவர்கள் சந்தித்தால் அவர்களுடைய சந்திப்பு சுமூகமாகவே இருக்கும் என்று அவன் நம்பினான்...

போலையர்புரம் கிராமம்....

அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஜனனி முகத்தில் ஒரு கலவரம் குடியேறியது. மீண்டுமாக இங்கெல்லாம் வரவே கூடாது என்று நினைத்திருந்தவள் தோழி சந்தியாவின் வற்புறுத்தலின் காரணமாக மீண்டுமாக கிராமத்திற்கு வந்து இருந்தாள்.  பேருந்தில் இருந்து இறங்கவுமே அவளது தோழி சந்தியா அவளை ஓடி வந்து கட்டி அணைத்துக்கொண்டாள்.

 அவளின் அணைப்பில் அவளது கலக்கம் வருத்தம் அனைத்தும் மாறிப்போயிருந்தது. அன்று முழுவதும் தன் தோழியுடன் உற்சாகமாக கதைகளை பேசி சிரித்தாள்.  

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.