Page 3 of 3
வேணும்னா, எதைச் செய்யணுமோ, அதை செய்து காரியத்தை முடிப்பாங்க! நீங்க சொன்னாமாதிரி, மூணே மாசத்திலே பிளாட்டை காலி பண்ணிக் கொடுத்துடலாம்."
வீடு திரும்பிய உடனே நிரஞ்சன் மற்ற ஓனர்களுக்கு நடந்ததை தெரிவித்தார்.
பிறகு, தன் மனைவி கலாவிடம் நடந்ததைக் கூறினார்.
" இப்ப, மனசுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்குப் பாருங்க! அதனால்தான் எப்பவும் நேர்மையாக நடக்க முயற்சிக்கணும்."
" ஆமாம், கலா! எல்லார்க்கும் பணம் வாங்கித் தரப்போகிறோம். எல்லா குடும்பங்களும் நம்மை மனமார வாழ்த்தும்!"
" சரி, நிம்மதியா தூங்குங்க, போங்க!"
தொடரும்
Next episode will be published on 3rd Nov. This series is updated weekly on Tuesday mornings.