தன் அறைக்கு வந்த அமுதவள்ளி அதற்கு மேலே பிரணயைப் பற்றி யோசிக்க கூட இல்லை. அவர்கள் கம்பெனி தொடர்பாக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்திருந்த மார்க்கெட்டிங் சேல்ஸ் ரிப்போர்ட்களை பொறுமையாகப் பார்த்தாள். எந்தெந்த இடங்களில் தொய்வு தெரிகிறது என்று நோட் செய்து வைத்தாள். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வந்திருந்த பகுதிகளுக்கு வாழ்த்து ஈமெயில் அனுப்பினாள்.
மற்ற ஈமெயில்களையும் பொதுவாக பார்த்து முடித்தாள். இப்போது வந்திருந்த கான்ஃபரன்ஸ் பற்றி தன் பர்சனல் டைரியில் சின்ன சின்ன நோட்ஸ் எடுத்து வைத்தாள். யாரெல்லாம் ராஜ்பால் இண்டஸ்ட்ரீஸ்க்கு உதவியாக இருப்பார்கள், என்ன விதத்தில் அவர்களால் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் யோசித்து கிறுக்கினாள்.
மற்றபடி பொதுவாக அறிமுகம் ஆனவர்களை தனியாக எழுதி வைத்தாள். அந்த லிஸ்ட்டில் கடைசியாக பிரணயின் பெயரையும் சேர்த்தாள்.
நேரம் போனதே தெரியாமல் வேலை செய்துக் கொண்டிருந்தவளை மொபைல் போனின் அழைப்பு தொந்தரவு செய்தது.
முதலில் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடலாம் என்று தான் அமுதவள்ளி நினைத்தாள். ஆனால் அழைப்பு பர்சனல் நம்பரில் வந்திருப்பது புரியவும் எரிச்சலுடன் மொபைலை கையில் எடுத்தாள்.
டிஸ்ப்ளே சித்தி என்றுக் காட்டவும், உடனே அவளின் மனநிலை மாறிப் போனது. வேகமாக அழைப்பை ஏற்றாள்.
“சாரி சித்தி. வேற யாரோ கூப்பிடுறாங்கன்னு எடுக்காம இருந்தேன். நீங்கன்னு தெரிஞ்சிருந்தா உடனே எடுத்திருப்பேன்” – அமுதவள்ளியின் குரல், பேச்சுத் தொனி எல்லாமே மாறிப் போயிருந்தது. அவளிடம் அதுவரைக்கும் இருந்த கடுமை, அந்நியத்தன்மை எல்லாம் காணாமல் போய் மென்மையும், அவள் வயதுக்கு உரிய இனிமையும் வந்திருந்தது.
“சாப்பிட்டியா அம்மு?” – ராதாவின் கேள்வியிலும் பாசம் தெரிந்தது.
அமுதவள்ளிக்கு அப்போது தான் இரவு உணவு உண்ணாதது ஞாபகமே வந்தது. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது.
உடனே தானாக பசியும் தெரிந்தது!
சித்தியிடம் சாப்பிடவில்லை என்று சொன்னால் என்ன ஆகும் என்பது அமுதவள்ளிக்கு தெரியும். அவள் லெக்சர் கேட்கும் மனநிலையில் இல்லை.
“சாப்பிட்டேன் சித்தி” – பொய் சொன்னாள் அமுதவள்ளி.
“நீ இல்லாம வீடே எப்படியோ இருக்கு அம்மு. இந்த ஆயுஷும் உன்னைப் போல இருக்க
Look forward to read the upcoming updates.
Thank you and wish you all the best 💐