(Reading time: 39 - 77 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

ரஞ்சனுக்கு ஒரே கவலைதான். மீராவிற்கு ரேச்சல் ரோல்பற்றி தெரியாமல் இருந்தால் சத்யனுக்கு நல்லது. அவன் பேசிய அத்தனை வார்த்தைகளுக்கும் அவன் பிரதிபலனை அனுபவித்தாக வேண்டும்அதிலும் கடைசியாக பசுமை குடிலில் வைத்து பேசியதையும் அவள் கேட்டிருக்கிறாள். சத்யன் ஒற்றை காலில் நின்று தவம் செய்தாலும் மன்னிக்க மாட்டாள்

"அப்பாநீங்கள் அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க…. நந்து மனுவுடன் தனியாக இருப்பாள். மீரா கண் எப்போது கண் விழிப்பாள் என்று தெரியவில்லை. இரவாகி விட்டது" சத்யன் சொல்ல,

"இருப்பாஇவ்வளவு நேரம் காத்திருந்து விட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம்." என்று விஜயா சொன்னார்.

அத்தனை பேரும் காத்திருக்க இரவு ஒன்பது மணிக்கும் ரேச்சல் கண் விழிக்கவில்லை என்று தெரியவும் விஜயாவை அழைத்துக் கொண்டு மகேஸ்வரன் கிளம்பினார். நந்தினியால் தனியாக மனுகுட்டியை இதற்கு மேல் சமாளிக்க முடியாது.

மறுநாள் காலை...

"ம்மா…" என்று மயக்கத்திலிருந்த  அவள் முணுமுணுத்ததை கேட்ட நர்ஸ் மருத்துவரை அழைத்தார்.

மருத்துவர் வந்து அவளை பரிசோதித்தார்.

"குட்…. எல்லாம் நார்மல்தான்…. இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க…"

"கொஞ்சம் டயர்டா இருக்கு. கல்பி எப்படி இருக்கா…"

'வாவ்.. இவங்களுக்கு ரேச்சல் ரோலின் நினைவுகள் இருக்கின்றன…'

"அவங்க நல்லா இருக்காங்கமீரா…"

மீரா ரோல் நினைவிற்கு வருமா… என்று டெஸ்ட் செய்தார்.

"யார் அந்த மீராஅவங்களுக்கு என்ன ஆச்சு?" அவள் கேட்கவும்இவங்களுக்கு தற்காலிகமா பழைய நினைவுகள் வந்துட்டு போயிடுச்சு போல….

"அது ஒண்ணுமில்லை…. அவங்க  என்னோட பேஷன்டுதான்...உங்களுக்கு வேறு யாரை தெரியும்…"

"டாக்டர், அம்மாவை கூப்பிடுங்கஷீலா மேத்யூஸ்நான் அவங்கள்ட்ட பேசணும்.." சோர்வாக சொன்னாள்.

அதற்குள் நர்ஸ் வெளியே சென்று ஷீலாவை அழைக்க…

"உங்க பொண்ணு உங்களை கூப்பிடறாங்க…"

21 comments

  • Interesting story.. starting laye Rachel meera 2perum ontru entru therinthalum kathaiyai neengal kondu pona vitham tompa super... Ella charactersum manathil pathinthathu thani sirappu... Hero Hermione matum alla Ella charactersum tompa super.. rompave super... Nija kunathai maraithu vitu meeravai nintravaluku unmai gunathai katta Rachel character kidaithathu good... Really good one... :clap: good luck for ur next story

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.