Can’t change the world…
But your smile changes mine…
“உங்க ஈமெயில் பார்த்தீங்களா ஹரீஷ்?” – நிலா ஹரீஷ் வந்த உடனே கேட்டாள்.
அவளுடைய ஆர்வம் ஹரீஷ்க்கு ரொம்பவும் பிடித்திருந்தது. மஹாவும் விஷ்ணுவும் அவனுடைய ஆசையை கட்டுப்படுத்த நினைத்ததில்லை. விளையாட்டாக கிண்டல் செய்வார்கள், பேசுவார்களே தவிர அவனுக்கு பிரத்தியேகமாக உதவியதும் கிடையாது. ப்ரோஃபஸர் மாதேஷும் அவனுக்கு கைட் செய்வாரே தவிர அதை தாண்டி நிலாவைப் போல கூடுதல் ஸ்பெஷலாக ஆர்வம் காட்டியதில்லை.
“ஆபீஸ்ல நிறைய வேலை சுபி. டைம் கிடைக்கலை” – ஹரீஷ் உண்மையை சொன்னான்.
“என்ன இப்படி இன்ட்ரஸ்ட்டே காட்டாம இருக்கீங்க. உங்க ஈமெயில் ஓபன் செய்ங்க. நாம அனுப்பின ஈமெயிலுக்கு ரிப்ளை வந்திருக்கா பார்க்கலாம்”
நிலாவுடைய ஆர்வம் பார்க்க சந்தோஷமாக இருந்தாலும், எங்கே அந்த ஆர்வமே அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விடுமோ என்றும் ஹரீஷ்க்கு கவலையாக இருந்தது. ஈமெயில் அனுப்புவதும், பதில் வராமல் போவதும், அவனுக்கு பழகிப் போயிருந்தது. ஆனால் நிலாவிற்கு ஏமாற்றமாக இருக்குமோ??!!
“எது நடக்கனும்னு இருக்கோ அது நடக்கும் சுபி. எல்லாத்தையும் ஈஸியா எடுத்து பழகிக்குறது நல்லது”
“சரிங்க மிஸ்டர் பிளாஸபர். இந்த அறுவையை எல்லாம் அப்புறமா கேட்டுக்குறேன். இப்போ ஈமெயில் ஓபன் செய்ங்க”
ஹரீஷ் அவனுடைய ஈமெயிலுக்குள் லாகின் செய்து லேப்டாப்பை நிலாவிடமே கொடுத்தான். நிலா அவனையே பார் என்று சொல்லாமல் லேப்டாப்பை வாங்கி படித்தாள்.
ஹரீஷ் அவளை அங்கே விட்டு விட்டு உடை மாற்ற சென்றான்!
“ஹரீரீரீரீரீரீரீரீரீரீரீரீரீஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!”
நிலா அலறிய அலறலில் என்னவோ ஏதோ என்று பயந்து ஓடி வந்தான் ஹரீஷ்.
“இங்கே பாருங்க - - - “ – மகிழ்ச்சி கொந்தளிக்க என்னவோ சொல்ல ஆரம்பித்த நிலா, ஹரீஷை பார்த்த உடன் பாதியில் நிறுத்தினான்.
சட்டை இல்லாமல் பனியனுடன் உடை மாற்றும் போது பாதியில் ஓடி வந்திருந்த ஹரீஷ்க்கே அவள் அப்படி பேச்சை நிறுத்தியதும் மெல்லிய வெட்கம் எட்டிப் பார்த்தது.
“நீ கத்துனதை கேட்டு என்னவோன்னு வந்தேன் நிலா” – அவசர அவசரமாக ஹரீஷ் அவன் அந்த கோலத்தில் வந்ததற்கான காரணத்தை விளக்கினான். நிலா முகத்தில் சிரிப்பு எட்டிப்
Thank you.