பஸ் ஸ்டாண்ட் முழுவதும் தேடிய குயிலி தான் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய பஸ் இல்லாததை கண்டு அங்கிருந்த கடையில் விசாரிக்கலாம் என்று ஸ்வீட் கடையை நோக்கி சென்றாள்.
அண்ணா... இப்போ நான் மூணாறுக்கு போக பஸ் இருக்குதா.
இப்போ பஸ் இல்லைமா... த்ரூ பஸ் என்றால் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். மாறி மாறி போகலாம் என்றால் இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு பஸ் வரும். அதில் ஏறி நீ மாறி மாறி மூணார் போகலாம் என்றார் கடைக்காரர்.
காத்திருக்க நேரம் இல்லை என்பதை உணர்ந்தவள் வாடகைக்கு காரை அமர்த்திக்கொண்டு மூணார் நோக்கி பயணத்தை தொடர்ந்தாள்.
தன் பயணம் சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள குறிப்பு தாளை எடுத்து பார்த்தாள்.
விலங்குகளின் படங்கள் இருக்க அதில் வரையாடு படத்தின் மீது மட்டும் சிறு புள்ளிகள் இருந்தது. பின் பக்கத்தில் இருந்த 36 என்பது மூணாரை குறிக்கிறது. அப்படி என்றால் பாரஸ்ட் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று எண்ணியவள மூணார் அருகிலிருந்த தன் கொலிக்கிற்கு அழைத்து அவள் மூணார் ரீச் ஆனதும் பாரஸ்ட் ஏரியாவிற்கு செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டாள்.
குயிலி யின் கொலிக் தற்போது அந்த பகுதியில் ஆபிஸராக இருப்பதால் எளிதாக அவளுக்கான ஏற்பாட்டை செய்தாள்.
தேனி பஸ் ஸ்டாப் முழுவதும் பிரதாப் ஆட்கள் குயிலின் புகைப்படத்தை காட்டி விசாரித்தார்கள். இறுதியில் குயிலி விசாரித்த அதே கடையில் கேட்க அவரும் அவள் மூணார் செல்வதைப் பற்றி விசாரித்தார்கள் என்று சொல்ல அவளை தேடி மூணார் நோக்கி ஒரு கூட்டம் பயணமானது.
குயிலி தனியாகத்தான் சென்றால் என்று தெரிந்ததும் ஆசிர்வாதம் பற்றி விசாரித்து அறிந்த மற்றொரு கூட்டம் சென்னை நோக்கி பயணத்தை தொடங்கினர்.
மும்பை.....
மும்பை சென்று அடைந்ததும் பிரதாபன் சத்யா மூவரும் கெஸ்ட் ஹவுஸில் தங்கினார்கள். அன்று முழுவதும் வேலை எதுவும் இல்லை. வீட்டில் இருப்பதாக பிரதாபன் சொல்லவும் மூவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்த பிறகு மீண்டும் மூவரும் பிசினஸ் அரசியல் பொழுதுபோக்கு என்று பேசி தங்கள் நேரத்தை கழித்தனர்.
ராகவ்விற்கு அந்த அனுபவம் புதுமையாக இருந்தது. அவனுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து
Interesting update jeba ma'am 👏👏👏👏👏👏 kuyili-i releive panurenu sonnadhu idhu thano 😈 waiting to see what happens next.
Thank you.
Ellam pocha ini enna agumo