(Reading time: 7 - 13 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

" பிளாட்டை ஒரு மாசத்திலே  காலி பண்ணி, அதிக ஊக்கத்  தொகை வாங்கணுமே, என்ன  செய்யலாம்?"  " காலி பண்ணிடலாம்..."  " அது சரி, காலி பண்ணிய  பிறகு எங்கே வசிப்பது?"  " நம் கையில் உள்ள பணம்,  வாடகைக்குத்தான் போதும்.  அதுக்குமே, ஆறுமாத முன்  பணம் கொடுக்க பணம்  தேடியாகணும். மறந்துட்டேனே, நம்ம வீட்டு  மேலே வாங்கியிருக்கிற பேங்க் கடனை தீர்த்தாகணும்  ஒரு மாசத்திலே முடியவே  முடியாது......"

" அம்மா! ஒவ்வொரு  மாத டிலேயின் விலை பத்து  லட்ச ரூபாய்! புரியுதா?"

  " என்ன சொல்றீங்க,  சேகர் கேட்கறானே?"

  "கலா! நீ வேலை செய்ற  பேங்க்ல பர்சனல் லோன்  எவ்வளவு கிடைக்கும்?"

 " ஐம்பதாயிரம் தான்,  அதிக பட்சமா தருவாங்க!"

 " எங்க ஆபீஸிலே அது  கூடத் தரமாட்டாங்க, அதிக  பட்சமா முப்பதாயிரம்தான்  கிடைக்கும்......"

 " போதுமே! மொத்தம்  எண்பது ஆயிரம் கடன்வாங்கி  அதிலே ஆறுமாத முன்பணம்  தந்து வீட்டை வாடகைக்கு  எடுத்து அங்கு உடனடியா  போய்ட்டு, ஊக்கத்தொகை  கிடைத்ததும், கடனை  அடைத்துவிடுவோம். ஆறு  மாதங்களிலே ஒரு கோடி  கிடைச்சதும், பிளாட்டோ,  வீடோ வாங்கிடுவோம்....."

 " அப்பா! அம்மா சொல்ற  படி செய்யுங்க! அதிகபட்ச  ஊக்கத்தொகை கைக்கு  வந்துடும்....."

  " ஓ.கே. கூடவே, வில்லங்க பத்திரம் வாங்க  உடனடியா ஆளை பிடிக்க  யோசனை பண்றேன்...."

 " எப்படி வாங்குவீங்க?  பேங்க் லோன் ஒரு லட்சம்  அடைத்தபிறகுதானே, பிளாட்  மீது கடன் ஒண்ணுமில்லேனு  சர்டிபிகேட் தருவாங்க! அந்த  பணத்தை எப்படி புரட்டறது?"

  " மறந்தே போச்சே! ஒரு  லட்ச ரூபாய் கடன் எதுக்கு  எப்போ வாங்கினோம்?"

 " ஊரிலே இருக்கிற உங்க பெரிய வீட்டை ரிபேர்,  பெயிண்ட், வேலைக்காக  பத்து வருஷம் முன்பு லோன்  வாங்கினோம். மாதம் அதுக்கு  வட்டி வேறே கட்டறோம்..."

  " இரு, இரு! ஒரு திடீர்  யோசனை! அந்த பெரிய  வீட்டுமேலே கடன் வாங்கினா  சுலபமா ரெண்டு லட்சரூபாய்  கிடைக்குமே, யாரிடமும்  நாம் கடனுக்கு கைநீட்ட  வேண்டாமே!"

  " நல்ல யோசனை! அந்த  வீட்டு பத்திரத்தை தேடி எடுத்து, ஊருக்குப் போய்  பணம் புரட்டிண்டு வாங்க!"

பிரச்னை தீர்ந்த திருப்தி  மூவர் முகத்திலும் தெறித்தது.

நடுத்தர வர்க்க குடும்ப  பிரச்னைகளில், இந்தமாதிரி  நெருக்கடி நேரத்திலே கடன்  புரட்டுவது முக்கியமான ஒன்று

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.