(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தோழிகள் சொல்லவும் ஒப்புக்கொண்டாள்.

மதிய உணவு இடைவேளையில் கண்மணியின் வகுப்பைத் தேடிச் சென்றாள் ரம்யா. கண்மணி எங்கோ விரைந்து சென்று கொண்டு இருப்பது தெரிந்தது. ஆவலுடன் அவளை அழைத்தவாறே, அருகில் சென்றாள் ரம்யா. “நான் கார்த்திக்கைப் பார்க்கப் போறேன் !” என்று ரம்யாவிடம் கண்மணி சொல்ல, “நானும் உன்கூட சும்மா கம்பெனிக்கு நடந்து வர்றேனே!” என்று புன்னகைத்தவாறே ரம்யா சொல்லவும், சற்று வியப்புடன், “இதெல்லாம் உனக்குப் புடிக்காதே ரம்யா! என்று சொன்னவள், மேலும் மெல்லிய சிரிப்புடன்

என்ன காத்து பலமா என் பக்கம் வீசுது?” என்றாள் புருவம் உயர்த்தி, “சும்மா தான் கண்மணி, போர் அடிக்குது,உன்கூட பேசிட்டே கொஞ்ச தூரம் வர்றேன். நீயும் கார்த்திக்கும் பேசுற வரைக்கும் வெயிட் பண்றேன்!” என்றவள், மேலும் சமாளிக்கும் விதமாக, “என் அண்ணன் ராபின் கூட அதே கிளாஸ் தானே, அவனுக்கு ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்!” 

ரம்யா பேசுவது கண்மணிக்குப் புதிதாகத் தெரிந்தாலும், “என்னது ராபின் அதே கிளாஸா? எல்லாரையும் டிபார்ட்மெண்ட் பிரிச்சாச்சு தெரியும்லகார்த்திக் மட்டும் தான் பயோடெக், ராபின் சிவில்!”

அப்போ தினேஷ் என்ன டிபார்ட்மெண்ட்?” ஆர்வக்கோளாறு நாக்கில் எட்டிப்பார்த்து விட்டது ரம்யாவிற்கு! “அவனைத் தான் உனக்குப் புடிக்காதே! அவன் என்ன டிபார்ட்மென்ட்ல இருந்தால் என்ன?” என்று கண்மணி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே கார்த்திக் எதிரில் வருவது தெரிந்தது, ரம்யா விலகிச் செல்ல நினைக்கையில், “ஹாய்! ஹாய்!” என அவன் இருமுறை கை அசைப்பது தெரிந்தது. ஒருவேளை தன்னிடம் தான் சொல்கிறானோ என்று அவள் நினைத்த வேளையில் ரம்யாவின் முதுகுக்குப்பின் தினேஷின் குரல் கேட்டது, “ஹாய்டா!” என்று பதிலுக்கு அவன் சொல்ல, ரம்யாவுக்கு பதட்டம் கூடியது. “வரேன் கண்மணின்னு!” சொல்லியவாறே அங்கிருந்து ஓடிவிட்டாள்.

இவ இங்கே என்ன பண்றா? கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் செகண்ட் செமஸ்டர் கிளாஸ் பாலிடெக்னிக்ல போட்ருக்காங்கன்னு கேள்விப்பட்டு அங்கே போய் தேடிட்டு வர்றேன்!” தினேஷ் சொல்லவும். வேர்க்க விறுவிறுக்க அவன் நடந்து வந்ததும், மூச்சு வாங்கியபடி நிற்பதும் கண்மணிக்கு சிரிப்பை வரவழைக்க, அதை வெளிக்காட்டாமல், “நீ உன் பிரெண்டைப் பாரு கார்த்திக்! நான் நாளைக்கு வரேன்!” என்று அவளும் கிளம்பிவிட்டாள்.  

“வா  தினேஷ்! இப்போ தான் கண்மணி சொன்னா! நீ அங்கே போய் ரம்யாவைத் தேட, அவ இங்கே வந்து கண்மணிகிட்ட நீ என்ன டிபார்ட்மென்ட்னு விசாரிச்சிட்டு இருந்திருக்கா! நீ எப்பவுமே என்கூட இருக்கிறதால நீயும் என் டிபார்ட்மெண்டில் தான் இருப்பன்னு நினைச்சிட்டு இருந்திருப்பா  போல. ஒரே காலேஜூக்குள்ளேயே  இரண்டு பேரும்  மாத்தி மாத்தி தேடிட்டு

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.