(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

இருக்கீங்க,!” கார்த்திக் சொல்லவும், “ஒரு வேளை நான் என்ன டிபார்ட்மென்ட்னு விசாரிச்சு என் மேல கம்ப்ளைன்ட் பண்ணப்போறாளா?” என்று தினேஷ் குறும்பாகக் கேட்கவும்,”கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறாளோ, காதல் கடிதம் கொடுக்கப் போறாளோ! யாருக்குத் தெரியும்?”என்று கார்த்திக் கிண்டலாகச் சொல்லவும், இருவரும் சிரித்தனர்.

என்ன இரண்டு பேரும் ஒண்ணா சிரிச்சிட்டு இருக்கீங்க!என்ன ஜோக் ?”என்றவாறே அங்கு வந்து சேர்ந்த ராபினிடம் ரம்யா வந்ததைச் சொல்லாமல், கட்டிடமே கட்டாமல் இந்த மேனேஜ்மெண்ட் காலேஜ் நடத்துவதைப் பற்றித் தான் சொல்லி சிரித்தோம் என்று சமாளித்தான் தினேஷ்நல்லவேளை ரம்யா இங்கு வந்து சென்றது ராபினின் கண்களில் படவில்லை என்று தினேஷ் நினைத்துக் கொண்டே, அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு நின்றான். கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சும் வெள்ளையும் சேர்ந்த வண்ணத்தில் பளிச்சென்ற உடையணிந்து அவள் செல்லச் செல்ல தனக்கும் அவளுக்கும் தூரம் அதிகமானாலும் அவனின் கண்களுக்குள்ளும், இதயத்துக்குள்ளும் ரம்யா ரொம்பப் நெருங்கி வந்துவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு.

வகுப்புகள் சுவாரசியமாகப் போனாலும், சில நேரம்  பாடவேளைகளில் ரம்யாவின் சிந்தனை சிதற ஆரம்பித்தது. தினமும் உணவு இடைவேளையில், கண்மணி அழைக்காமலே ஒட்டிக் கொள்வதும், அங்கே தினேஷ் இருப்பதைக் கண்டு ஒளிந்து கொள்வதும், ரம்யாவின் வழக்கமாகிப் போனது. வகுப்பில் ராகதேவி என்னும் புதிய தோழி ஒருத்தி கிடைத்தாள் ரம்யாவிற்கு. பாடவேளைகளில் ரம்யாவின்  கவனம் சிதறாமல் பார்ப்பது தேவியின் வேலையாகிவிட்டது. ரம்யா, “மேம், சொல்றாங்க, எழுது, நோட்ஸ் எடு!” என்று அவளைக் கனவுலகில் இருந்து, நிகழ்காலத்திற்குக் கூப்பிட்டுக் கொண்டிருப்பாள்.

ஒருநாள் கண்மணியுடன், தன் வகுப்புக்கு வெளியில் நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை அவளின்  பிசிக்ஸ் சார் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் பார்த்ததை ரம்யாவும் கவனித்து விட்டாள். இன்று வகுப்பில் கண்டிப்பாக நம்மிடம் எதாவது கேள்வி கேட்பார் என்று எதிர்பார்த்தாள். அதே போல், வகுப்பில் நுழைந்து அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்த மறுநிமிடமே, பிசிக்ஸ் சார், “ரம்யா! நேத்தைக்கு வகுப்பில் நடத்திய பாடத்தில் இருந்து லேசர் பேசிக் கான்செப்ட் சொல்லுங்க!” என்றார்.  

எப்போதும் போல ரம்யா கனவுலகில் தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாளோ என்ற பயத்தில் இருந்தாள் தேவி. பதில் சொல்லாவிட்டால், பிசிக்ஸ் சார் எதாவது கன்னாபின்னாவென்று ரம்யாவைத் திட்டிவிட்டால் வகுப்பில் எல்லார் முன்னாலும் அவமானமாகிவிடும் என்றெல்லாம் அவள் கவலைப்படத் தொடங்க, ஆனால் ரம்யாவோ சிறிதும் தங்குதடையின்றி, அவர் கேட்ட கேள்விக்கு விடையைச் சரியாகச் சொல்லிவிட்டு அமர்ந்தாள். “வெரிகுட் ரம்யா! உக்காருங்க!”

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.