“வினோ... நாம் நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? “ என்று தடாலடியாக கேட்டு வினோதனை இன்பமாய் அதிர வைத்தாள் மணிகர்ணிகா..
அவள் சொல்லிய செய்தியை கேட்டதும் வினோதன் மனம் எங்கும் பல வண்ண மத்தாப்புக்கள் பூத்தன.. ஆனால் அடுத்த நொடி சுதாரித்து கொண்டவன்
“என்னாச்சு டா? ஏன் இப்படி திடீர்னு கேட்கற? “ என்றான் யோசனையோடு....
“ப்ச்.. வினோ... நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க... நாம் நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? ஸே.. யெஸ் ஆர் நோ? “ என்றாள் குரலில் பிடிவாதத்துடன்....
“ஹ்ம்ம் ஐம் ஆல்வேஸ் ரெடி மா...ஏன் இப்பவே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்... ஆனால் நாம் நினைக்கிற மாதிரி அது அவ்வளவு ஈசி இல்ல.
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறதுக்கும் சில பார்மாலிட்டிஸ் இருக்கு.. நாம் முன்பே பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்... நினைத்த உடனே ரெஜிஸ்டர் ஆபிஸ் ல் போய் நின்னு கல்யாணம் பண்ணிக்க முடியாது...” என்று பொறுமையாக விளக்க முயன்றான்...
“ஓ...இதுல இவ்வளவு இருக்கா?..“ என்றாள் அவளும் யோசனையுடன்...
(அப்ப நாம் எவ்வாள்வு சீக்கிரம் ம்உடியுமோ)
“ஆமாம் டா.... சரி.. இப்ப சொல்லு.. ஏன் இந்த திடீர் முடிவு.? சென்ற வாரம் நான் இதை பற்றி கேட்ட பொழுது அப்பா கிட்ட பேசிக்கனு சொன்னியே? இப்ப ஏன் இந்த அவசரம்?
அந்த ராஸ்கல் உன்கிட்ட எதுவும் தகராறு பண்ணினானா? உனக்கு எதுவும் தொந்தரவு கொடுத்தானா? அப்படி எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல்லு மா... அவனை உண்டு இல்லைனு பண்ணிடறேன்.. “ என்று பல்லை கடித்தான் வினோதன்...
வினோதன் ராஸ்கல் என்று சொல்லவும் துஷ்யந்த் ன் முகம் கண் முன்னே வந்து நின்றது.. கூடவே அவள் ஏன் திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று கேட்டதற்கான காரணமும் மனதில் ஓடியது....
அன்று இரவு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு அவளுக்கு பிடித்த பாடல்களை கேட்டவாறு மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தாள் மணிகர்ணிகா..
அவள் மனம் முழுவதும் பல பிடிக்காத நிகழ்வுகள் முட்டி மோதிக்கொண்டு இருந்தன..
இன்று காலையிலிருந்தே எல்லாமே அவளுக்கு பிடிக்காததாய் நடந்து கொண்டிருந்தது.. காலையில் எழுந்ததிலிருந்தே அவள் மனதில் காரணமே இல்லாமல் எரிச்சல் சேர்ந்து கொண்டது..
மனமே இல்லாமல் அந்த பூஜைக்கு சென்றதும் கூடவே பூஜையில் அந்த துஷ்டனின் குடும்பத்தார் கொஞ்சம் அதிகமாகவே அவளிடம் உரிமை எடுத்துக் கொண்டது இன்னுமே