கௌதமின் நண்பர்களுக்கு விஜய் ஹீரோ போல தெரிந்தான், கௌதம் அங்கு ஜனனியை பிடித்து உலுக்கிக் கொண்டிருக்க அதைக் கண்டும் கோகுல் வாய்விட்டான்
”மச்சான் உங்க மாமா சூப்பரா ரொமான்ஸ் பண்ணியிருக்காருடா, கேட்கவே சுவாரஸ்யமா இருக்கே, நேர்ல பார்த்திருந்தா எப்படியிருக்கும், சினிமா மாதிரி லவ்ஸ்லாம் பண்ணியிருக்காரு போல” என பாராட்டி வைக்க அதற்கு ஜனனியோ
”சினிமால காட்டற லவ்வெல்லாம் ஒரு லவ்வா, அதைவிட விஜய் என்னை சூப்பரா லவ் பண்ணாரு, அப்படியே கவிதை போல எங்க காதல் அழகா இருந்துச்சி தெரியுமா” என பெருமையாகச் சொல்ல கௌதமால் அதை தாங்கிக் கொள்ள இயலவில்லை சகானாவோ
”அக்கா பாருங்களேன் உங்ககிட்ட பேசின வசனத்தையெல்லாம் பாப்பாகிட்ட சொல்றதை”
”விடு விடு பாப்பாகிட்ட சொல்றப்ப எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அவளும் தெரிஞ்சிக்கட்டும் நானும் விஜயும் எந்தளவுக்கு லவ் பண்ணோம்னு” என சொல்ல அதைக் கேட்ட கௌதம் ஆஆஆ வென கோபத்தில் அலற அனைவரின் பார்வையும் அவனிடம் சென்றது
”ஏன்டா இப்படி கரடி மாதிரி கத்தற“ என அமுதா திட்ட அவனோ
”போதும் நிறுத்துங்க, மாமாவை யாராவது பாராட்டினீங்க அவ்ளோதான், நான் வேற அக்காவுக்கும் மாமாக்கும் டைவர்ஸ் வாங்கித் தரலாம்னு இருக்கேன் அதை மறந்துடாதீங்க எல்லாரும், இப்ப அவர் பேசறதை வைச்சி எதையும் முடிவெடுக்காதீங்க, அக்கா இல்லைன்னு அளந்துவிடறாரு, அக்கா இருந்திருந்தா கண்டுக்காம போயிருப்பாரு” என கோபமாகச் சொல்ல அதை பெரிதாகவே மற்றவர்கள் கண்டுக் கொள்ளவில்லை, கௌதமும் அமைதியாக அமர்ந்தாலும் சற்று சினத்துடனே இருந்தான்.
அதைக் கண்ட சகானாவோ
”ஏங்க இப்படி பேசறீங்க, அண்ணாவை பாருங்க அவர் உருக்கமா பேசறாரு, அதுல இருந்து தெரியலையா அவர் அக்காவை எவ்ளோ லவ் பண்ணியிருக்கார்ன்னு, அவங்களைப் போய் பிரிக்க நினைக்கறீங்களே இது நியாயமா” என சொல்ல அதைக் கேட்ட கௌதமிற்கு கோபம் வந்தது ஆனாலும், கர்ப்பமான மனைவியை திட்ட மனமில்லாமல் அமைதி காத்தான்.
இதில் அமுதாவோ சமையல் செய்ய மனதில்லாமல் செய்யச் சென்றார், இன்னும் யாரும் டிபன் சாப்பிடாமல் இருந்தார்கள், அதற்குள் அவர் மதிய சமையலுக்குத் தேவையான காய்கறிகளை டிவியை பார்த்தபடியே நறுக்கினார், நடு நடுவில் கிச்சனுக்கு சென்று வந்தார், வந்ததும் என்னாயிற்று ஏதாயிற்று என கேட்டு தெரிந்துக் கொண்டார், அவரின் ஆர்வம் அனைவரையும் ஒட்டிக் கொள்ள அவருக்காகவே அனைவரும் கவனமாக பார்த்து வைத்துக் கொண்டார்கள்
Unakku innum palu valaralainu sollurappa I think baby oda mind voice appa ningalum innum valarala
Look forward to read the next epi.
Thank you.