மைத்தியின் குடும்பம் கீழ் மத்திய தர குடும்பம்.... இருவர் சம்பாதிக்கும்போதே சில மாதங்கள் கையை கடிக்கும் நிலை... அனந்து அரசாங்க வேலையில் இருந்தாலும் மூன்று மாதங்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பு... அதன்பிறகு சம்பளமில்லா விடுப்பே....
இன்னும் இரு மாதம் மட்டுமே அனந்துவின் சம்பளம் வரும்... அதன்பிறகு ஷியாமளாவின் வருமானத்தை நம்பியே குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை... அவர் வேலை செய்வது தனியார் பள்ளி என்பதால் விடுமுறை மிகக்குறைவு... அனந்துவிற்காக எடுத்த விடுமுறைக்காக அவர் சம்பளத்தில் பிடிக்கப்படும்...
எனவே அடுத்து வரும் மாதங்களை எப்படி கடத்துவது என்று மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் சியாமளா.... குழந்தைகளின் கல்வி செலவு, மருத்துவ செலவென்று கணிசமான தொகை தேவைப்படும்... எப்படி சமாளிப்பதென்று புரியாத நிலை...
அனந்து ஒரே மகன்.... அதனால் அவர் பக்கமிருந்தும் பெரிதாக உதவ யாரும் இல்லை... ஷியாமளாவின் உடன் பிறந்தவர்களும் இதே கீழ் மத்தியத் தர நிலையிலுள்ளவர்கள்தான்.... வரும் வருமானம் அவர்கள் குடும்பம் நடத்தவே போதுமானதாக இருந்தது... இது அனைத்தையும் யோசித்து மிகுந்த கவலைக்குள்ளானார் ஷியாமளா...
அவர்கள் பகுதியின் வாசல் படியில் கவலையுடன் அமர்ந்திருந்த ஷியாமளாவை பார்த்தபடியே வந்தமர்ந்தார் கற்பகம்.... தந்தை உறங்குவதால் மைத்தியும் வந்து அருகில் அமர்ந்தாள்...
“என்னடி ஷியாமளா.... ஏன் இத்தனை கவலைப்பட்டுண்டு இருக்க... மாப்பிள்ளை ஏதானும் உடம்பு முடியலைன்னு சொன்னாரா....”
“எங்கம்மா.... நான் கவலைப்படுவேனேன்னு வலிச்சாக்கூட சொல்ல மாட்டேங்கறார்... நானா பார்த்து கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு...”
“அப்பறம் எதுக்கு இப்படி உட்கார்ந்துண்டு இருக்க...”
“செலவை நினைச்ச பயமா இருக்கும்மா... எப்படி சமாளிக்க போறோம்ன்னே தெரியலை...”
“ஏண்டி நாங்க இத்தனை பேர் இருக்கோம்.... பார்த்துக்க மாட்டோமா... கவலையை விடு...”
“ஏதோ ஒரு மாசம்ன்னா பரவாயில்லைமா.... கண்டிப்பா அடுத்த ஒரு வருஷம் அவரால வேலைக்கு போக முடியாது... இப்போதான் மைத்தி பத்தாம் கிளாஸ் வந்திருக்கா... அடுத்து அவ படிப்பை பார்க்கணும்.... இதை தவிர கிரிக்கெட் கோச்சிங்.... மாதவனோட ஸ்கூல் பீஸ்.... இதெல்லாம் எப்படி சமாளிக்கறது... அண்ணாலாமும் ஒண்ணும் பெரிய வருமானத்துல இல்லைம்மா.... தொடர்ந்து உதவி செய்ய அவாளாலையும் முடியாது.... வேற என்ன பண்றதுன்னு யோசிக்கணும்....”
“அம்மா எனக்கு இப்போ நன்னா பந்து வீச வர்றதும்மா.... அதனால இனி கோச்சிங்
Look forward to read the next update.
Thank you.