(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தேவைப்படாதுன்னு நினைக்கறேன்... அதை நிறுத்திடலாம்...  ஸ்கூலும் வேணா பிரைவேட்டா பரீட்சை எழுத முடியுமான்னு பார்க்கறேன்... அப்போ ஸ்கூல் பீஸ் இருக்காதே... மாதவன் படிப்பு மட்டும் பார்த்துண்டா  போரும்....  அதுவும் தவிர இனி விளையாடற எல்ல மேட்ச்க்கும் இனி எனக்கு பணம் தருவா... முன்னாடி மாதிரி மேட்ச் விளையாட, தங்க அப்படின்னு நாம செலவு பண்ண வேண்டாம்ன்னு என்கூட விளையாடின அக்கா சொன்னா...  அதனால அந்த செலவு இருக்காது....”, தனக்கு தெரிந்த வகையில் தீர்வை சொன்னாள் மைத்தி....  

“அதெல்லாம் சரிப்பட்டு வராது மைத்திம்மா....  நீ படிக்கற வேலையை மட்டும் பாரு... இந்த கவலையெல்லாம் படாத....  படிப்புதான் நமக்கெல்லாம்... இந்த விளையாட்டு எத்தனை நாளைக்கு... நன்னா படிச்சாத்தான் நல்ல வேலைக்கு போய் உசந்த நிலைக்கு வர முடியும்... அதனால இந்த பிரைவேட்டா படிக்கறதெல்லாம் சரிப்பட்டு வராது...  உன்னோட முதல் போட்டில ஏதோ பிரச்சனை ஆச்சுன்னு சொன்னியே... இன்னைக்கு பத்ரி வந்த உடனே அவனையும் கூட்டிண்டு,  நீ பாஸ்கர் சாரை போய் பார்த்து அதுக்கு என்ன அபராதம் கட்டணமோ அதை பத்தி கேட்டுட்டு வா...”, ஷியாமளா தீர்மானமாக சொல்ல மைத்தி தலையசைத்தாள்....

மாலை கல்லூரியிலிருந்து பத்ரி திரும்பியதும்  அவனும், மைத்தியுமாக சென்று பாஸ்கரை சந்தித்தார்கள்...

“வாம்மா மைத்தி... அப்பா எப்படி இருக்காங்க...”, இருவரையும் வரவேற்றபடியே கேட்டார் பாஸ்கர்...

“அப்படியேதான் இருக்கார் கோச்.... “

“ஹ்ம்ம் எல்லாம் போதாத நேரம்... வேற என்ன சொல்ல... அப்பறம் நல்ல படியா விளையாடி எங்க பேரை காப்பாத்திட்ட... இதே முனைப்போட இனியும் விளையாடணும்... அதுலையும் தொடர் ஆட்ட நாயகி முதல் முறையா விளையாடும் போட்டியிலேயே வாங்கி இருக்க...  ரொம்ப சந்தோஷம்....”

“தேங்க்ஸ் கோச்...  கண்டிப்பா நல்லபடியா விளையாடுவேன் கோச்...”

 “அடுத்த மாசம் நம்ம அகாடமில ஸ்பெஷலா ஒரு வார  பயிற்சி கொடுக்க சுழற் பந்து வீச்சாளர் ரவி சாஸ்த்ரி வர்றார்...  அவர்கிட்ட இருந்து நிறைய டெக்னிக் கத்துக்கலாம்...  தினம் ஒரு ரெண்டு மணிநேரம் பயிற்சி இருக்கும்.... கண்டிப்பா சேர்ந்துடு...”

“கோச்... அது... அது... கொஞ்சம் கஷ்டம்...  நான் இன்னைக்கு உங்கக்கிட்ட பேச வந்ததும் அதை பத்திதான்... இனி என்னால இங்க கோச்சிங் வர முடியுமான்னு தெரியலை... உங்களுக்கே எங்க ஆத்து நிலைமை தெரியும்...  அப்பாக்கு ட்ரீட்மெண்ட்க்கே நிறைய செலவு

2 comments

  • Realistic screenplay Jayanthi ma'am 👏👏👏👏👏👏 impressed with mythri 👌 hope someone provide sponsorship...why don't u dont u be mythri's sponsor natamai 😍😍<br />Look forward to read the next update.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.