(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

இரு...  இந்த மாதிரி நிறைய விஷயங்கள் ஆட்டம் நடக்கும்போது இருக்கும்... எதையும் காதுல வாங்காம  உன்னோட கவனத்தை நீ போடப்போற பந்துல மட்டும் வை...”

“அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு கோச்... ஏற்கனவே இருக்கற செலவையே செய்ய முடியாம அம்மா திண்டாடிண்டு இருக்கா... இதுல என்னால வேற புது செலவான்னு நினைச்சு கவலைப்பட்டுண்டு இருந்தேன்...  இப்போதான் நிம்மதியா இருக்கு... நீங்க அந்த ஸ்பான்ஸர் கேட்டு சொல்லுங்கோ கோச்...”

“கண்டிப்பா... இந்த வாரம் ரெஸ்ட் எடுத்துக்கோ.... அடுத்த வாரம் பயிற்சிக்கு வரும்போது சொல்றேன்...”, மைத்தியும், பத்ரியும் பாஸ்கரிடம் விடை பெற்று கிளம்பினார்கள்...

ஷியாமளா பள்ளி செல்ல ஆரம்பிக்க, காமாட்சி அனந்துவை பார்த்துக்கொண்டார்... மைத்தியும், மாதவனும் பள்ளி சென்று வந்து தங்களால் முடிந்த உதவியை செய்தார்கள்... வாரம் ஒருமுறை ஒரு நர்ஸ் வந்து காயங்களை பரிசோதித்து கட்டுகளை மாற்றி சென்றார்...

இப்படியாக ஒரு வாரம் செல்ல மைத்தி அகாடமிக்கு சென்றாள்... மைத்தி உள்நுழைய பாஸ்கரின் முகம் களையிழந்திருந்தது...   வழக்கமான பயிற்சிகள் முடிந்து அனைவரும் கிளம்ப மைத்தியும், துளசியும் பாஸ்கரிடம் பேச சென்றார்கள்...

“கோச் ஸ்பான்ஸர் பத்தி கேட்டு சொல்றேன்னு சொல்லி இருந்தேளே... ஏதானும் தகவல் கிடைச்சுதா...”

“இல்லை மைத்தி... யாரும் கிடைக்கலை...  நானும் முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கேன்...  இப்போ வரை பலன் பூஜ்ஜியம்தான்...”

“என்ன சார் இது... இந்திய லெவல் பிளேயர்... இவளுக்கே இப்படி சொல்றீங்க...”

“என்ன பண்ண கண்ணன் சார்...  ஆண்கள் கிரிக்கெட்னா சலாம் போட்டுட்டு ஸ்பான்ஸர் பண்ண ரெடியா இருக்காங்க.... பெண்கள் கிரிக்கெட் இதை யாரும் விரும்பி பார்க்க மாட்டாங்க... எங்களுக்கு ரீச் கிடைக்காதுன்னு பின் வாங்கறாங்க...”

“ஹ்ம்ம்.... அவங்களுக்கு அவங்க விளம்பரம் பெரிசா போச்சு...  இங்க அகாடமில எதுவும் ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்காதா சார்... உங்க நிறுவனர்க்கிட்ட பேசிப்பாருங்களேன்...”

“அவர்க்கிட்டதான் முதல்ல கேட்டேன் சார்... அகாடமில வேணா வந்து ப்ரீயா ப்ராக்டிஸ் பண்ணட்டும்... வேற எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாரு... இங்க எடுக்கற பயிற்சி அவளுக்கு இன்டர்நேஷனல் லெவல்ல விளையாட போதவே போதாது... கண்டிப்பா தனி கோச் போட்டு பயிற்சி கொடுக்கணும்...”

“மைத்தி எவ்ளோ நல்லா விளையாடற பொண்ணு... எங்க அகாடமி பொண்ணு இந்திய அளவுல விளையாடி பேர் வாங்கி இருக்கான்னு இவங்க இங்கிலாந்து சீரீஸ் முடிஞ்ச உடனே பெரிய

2 comments

  • Realistic screenplay Jayanthi ma'am 👏👏👏👏👏👏 impressed with mythri 👌 hope someone provide sponsorship...why don't u dont u be mythri's sponsor natamai 😍😍<br />Look forward to read the next update.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.