I love you so much that I miss you when I close my eyes to blink.
“இருந்தாலும் உங்களுக்கு பேராசை தான்!” – அதை சொன்னப்போது நிலாவின் விழிகள் மீண்டும் பளிச்சிட்டது. நிலா அவன் மனதில் ஓடிய காதல் எண்ணத்தை புரிந்துக் கொண்டாளோ என்ற கேள்வியும், அதனால் வந்த தடுமாற்றமுமாக மெல்ல தள்ளி வந்தான் ஹரீஷ்.
அவன் உடை மாற்றி வந்தப்போது நிலா அறையில் இல்லை. இருந்தாலும் அந்த அறை முழுவதும் அவளுடைய வாசனையால் நிறைந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது.
நிலா, நிலா, நிலா – அவன் மனம் முழுவதும், நினைவு முழுவதும் அவள் மட்டுமே தான் இருந்தாள்!
சுபாஷை பார்த்தப் பிறகு நிலா நடந்துக் கொள்வதை வைத்துப் பார்த்தால் அவளும் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டாள் என்று தான் அவனால் யோசிக்க முடிந்தது. அது சரியா தவறா என்று உறுதியாக நிலாவால் தான் சொல்ல முடியும். ஆனால் அவளிடம் சுபாஷ் பற்றி நேரடியாக பேச ஹரீஷுக்கு தயக்கமாக இருந்தது. அவளாகவே அவனிடம் மனம் விட்டு பேசினால் பரவாயில்லை!
அவன் யோசிப்பது அவனுக்கே பைத்தியக்காரத் தனமாக தோன்றியது.
நிலாவிடம் உன் காதலன் பற்றி சொல் என்று கேட்க அவனுக்கு தயக்கமாக இருந்தால், என் பழைய காதலன் இவன் என்று பேச அவளுக்கு எவ்வளவு அதிகமாக தயக்கமாக இருக்கும்?
ஹரீஷ்க்கு என்ன செய்வது என்று புரியவில்லை! எப்படி இந்த கேள்விக்கான சரியான பதிலை கண்டுப்பிடிப்பது???
முன்பு போல நிலாவை தெரிந்த பெண், தோழி என்ற கோணத்தில் பார்க்க முடிந்தால் பரவாயில்லை. ஆனால் இப்போது எல்லாம் நிலாவின் அருகாமையில் அவனுடைய மனம் அவனின் சொல் பேச்சு கேட்க மறுத்து அடம் பிடித்து கொண்டு இருந்தது.
என்ன செய்வது என்று புரியாமலே சமையலறைக்கு வந்தான்.
அங்கே மஹா, நிலா இருவரும் இல்லை. டிவி சத்தமும், பேச்சு சத்தமும் ஒன்றாக கேட்டது. லிவிங் ரூம் சென்றான். அவன் நினைத்ததுப் போலவே மாமியாரும் மருமகளும் ஒன்றாக சீரியல் பார்த்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
“இவ செய்றது தான் அத்தை தப்பு” – நிலா
“அப்படி சொல்ல முடியாது நிலா. இந்த தீபக்கும் சரியா இல்லை. அவனால தான் எல்லா பிரச்சனையும்” – மஹாலக்ஷ்மி
“அம்மா???” – அலறாத குறையாக அழைத்தான் ஹரீஷ்.
“என்ன ஹரீஷ்? எதுக்கு கத்துற?” – மஹா
Thank you.