Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 61 - 122 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Kandathoru katchi kanava nanava endrariyen
Pin It

தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 16 - சசிரேகா

கோவை

அடுத்த நாள் வசிகரன் பேங்குக்கு சென்று கடன் விஷயமாக அலைய ஆரம்பித்தான். அந்த பேங்கில் அப்போது நுழைந்த ஒருவன் வசீயிடம் சென்று அவன் தோளை தொட்டு பேசலானான்.

”வசீ தெரியுதா என்னை”

”ஆ தெரியும் ராம்தானே”

”ம் ஆமாம் இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு ராம்”

”எதை நினைச்சி”

”நீ இப்ப நடுத்தெருவுல வந்திட்டியே ஆமா என்ன இது ஓ லோன்க்கான அப்ளிகேஷன் வாவ்”

 என சிரிக்க

”சரி சிரிச்சி முடிச்சிட்டன்னா வழி விடு நான் போகனும்”

”இரு ஏன் அவசரபடற வா உன் கூட கொஞ்சம் தனியா பேசனும்”

என  சொல்லியபடியே எதிரிலி இருந்த ஓட்டலுக்கு வசியை அழைத்து சென்றான் ராம். . சில உணவுகளை ஆர்டர் செய்தவன் அவனிடம் பேசலானான்.

”ராம் எதுக்காக இப்படி செய்ற என்ன வேணும் உனக்கு”

”போதும் வசீ எனக்கும் என் கம்பெனிக்கும் நீ செஞ்ச காரியத்தை அதுக்குள்ளயா மறந்துட்டா”

”இங்க பாரு ராம் நான் வேணும்னு செய்யல தொழில்னு வந்துட்டா வெற்றி தோல்வி சகஜம் என்னோட மில்லுக்காக நான் கஷ்டப்பட்டேன் அதேமாதிரி நீயும் உன்னோட மில்லுக்காக கஷ்டப்பட்ட ஆனா என்ன செய்றது அதிர்ஷடம் என் பக்கம் என்னால என் மில்லை உயரத்திற்கு கொண்டு போக முடிஞ்சது உன்னால முடியலை”

”அதை தான் நானும் சொல்ல வந்தேன் வசீ, இந்த ஊருக்கு நான் வந்தப்ப ஏதாவது பிசினஸ் செய்யலாம்னு ஆசைபட்டேன் அப்ப தான் இந்த மில்லை ஆரம்பிச்சேன், ஏறைக்குறைய 5 வருஷ போராட்டம் வெற்றி கிடைக்காம நஷ்டத்தை கொடுத்திச்சி எனக்கு திறமை பத்தலையா இல்லை என்னோட எதிரிக்கு திறமையிருக்கான்னு சொல்ல தெரியல” என வசியை பார்த்தபடி சொல்ல அதில் அவன் கடுப்பானான்.

”இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற ராம்”

”சிம்பிள் உன்னோட மில்லால என்னோட மில்லுக்கு பெரியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுடுச்சி அதனால நான் என்னோட மில்லை குளோஸ் பண்ணிட்டு பாரின்க்கு போலாம் நினைச்சேன். ஆனா அந்த சமயம் உன்னை பத்தி ஊருக்குள்ள பேசற கதை என் காதுக்கு எட்டிச்சி என்னன்னு யோசிக்கிறியா உன்னோட அப்பா சித்தப்பாவே உன்னை ஏமாத்திட்டாங்களாமே உன்னுடைய மில்ல கஷ்டப்பட்டு வெற்றியடைய முடிஞ்ச உன்னால பாவம் உன் குடும்பத்தை சரிசெய்ய முடியாம தோல்வியடைஞ்சிட்ட போல” என சிரிப்புடன் சொல்ல

”இதை சொல்லத்தான் கூப்பிட்டியா சந்தோஷம் நான் கிளம்பறேன்”

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Naan vazhum vazhve unakkagathaaneNaan vazhum vazhve unakkagathaane
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 16 - சசிரேகாmadhumathi9 2020-11-26 20:36
:clap: nice epi sasi :-) eagerly waiting 4 next epi. :thnkx: for 31 pages :dance: :dance: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 16 - சசிரேகாSabariraj 2020-11-26 18:13
வசீயோட வாழ்க்கையில் அவனை தவிர எல்லாருமே அவனுக்கு பதிலாக முடிவெடுகிறார்கள். முதலில் பெற்றவர்கள் இப்ப அவன் மனைவியும் புது விரோதியும். அதன் முடிவு துயரம்தான். அய்யோ பாவம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 16 - சசிரேகாSabariraj 2020-11-26 18:09
super update
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

LD

PMM

IOK

NSS

IOKK2

NSS

NeeNaan

EU

KAM

KET

TTM

PMME

NSS

NSS

THAA

KDR

NY

VIVA

IROL

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top