(Reading time: 10 - 19 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

“என்னம்மா பேசறே?...நீ சொல்ற மாதிரி என் உடம்புல திமிர் ஏறியிருந்தா உடனே கல்யாணத்துக்கு “சரி”ன்னு அல்ல பதில் சொல்லியிருப்பேன்?...”திருப்பிச் சொன்னவளை ஏறிட்டுப் பார்த்த பார்வதி,

“சரி...சரி...பேசினது போதும்!...எதுக்கும் ரெண்டு மூணு நாளு நல்லா யோசி!...வேணும்னா யார்கிட்டேயாவது கலந்து பேசிப் பாரு...அப்புறம் சொல்லு உன்னோட முடிவை!” என்றாள்.

“ஹூம்...அம்மா...பத்து நிமிஷம் யோசிச்சாலும் பதில் இதுதான்!...பத்து நாள் யோசிச்சாலும் பதில் இதேதான்!”

“வாழ்க்கைல அதிர்ஷ்டம் எப்பவாதுதான் வந்து கதவைத் தட்டும்!...அந்த நேரத்துல கதவைத் திறந்து அதை உள்ளார அழைச்சுக்கிட்டா வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்!...அந்த சமயத்துல வெட்டி வீராப்பு பேசிக்கிட்டு விறைப்பாய் இருந்துக்கிட்டா...அப்புறம் மகிழ்ச்சியும் இல்லை!...மண்ணாங்கட்டியும் இல்லை!...புரிஞ்சுக்க...அவ்வளவுதான் சொல்லுவேன்!”

அப்போது,

உள் அறையிலிருந்து சுலோச்சனாவின் குரல், “அர்ச்சனா..அர்ச்சனா” என்று அழைக்க,

“இருக்கா வர்றேன்!” என்றபடி தன் தாயை அலட்சியமாய்ப் பார்த்துக் கொண்டே உள் அறைக்குள் சென்றாள் அர்ச்சனா.

“என்னக்கா?...எதுக்குக் கூப்பிட்டே?” அந்த ஆவேசம் அவள் குரலில் அப்படியே இருந்தது.

“எதுக்குடி அம்மா கூட வீணா தகராறு பண்றே?” சுலோச்சனா உரிமையோடு தங்கையை அதட்ட,

“என்னது?...நான்...நான் தகராறு பண்றேனா?..சொல்லுவேக்கா..சொல்லுவே!...உன்னைப் பெண் பார்த்திட்டுப் போன அந்தக் கிறுக்கு மாப்பிள்ளை என்ன சொல்லி அனுப்பியிருக்கான் தெரியுமா உனக்கு?”

“ம்...தெரியும்!” புன்னகையோடு சொன்ன சுலோச்சனாவை நெகிழ்வோடு பார்த்தாள் அர்ச்சனா.

“என்னது?...தெரியுமா?...எப்படிக்கா...எப்படிக்கா...அது தெரிஞ்சும் உன்னால கோவப்படாம இருக்க முடியுது?”

“கோவப்பட்டா மட்டும் என்ன ஆயிடும்?...அந்த மாப்பிள்ளைப் பையனுக்கு என்னைய பிடிச்சுப் போயிடுமா?...பாகற்காயைப் பார்த்து கசக்குதேன்னு கோவப்பட்டா...அது உடனே இனிப்பா மாறிடுமா?”

“அதுக்காக...அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட முடியுமாக்கா?...நாம என்ன அடிமைப் பிறப்புகளா...இல்லை அற்பப் புழுக்களா?””

“இங்க பாரு அர்ச்சனா..இது எமோஷனலா தீர்மானிக்கற விஷயமில்லை!..பிராக்டிகலா யோசிச்சு தீர்மானிக்கற விஷயம்!...அதனால..எனக்கென்னமோ நீ உன் சம்மதத்தைச் சொல்லிட்டு...அந்த

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.