ஜெயா இன்டஸ்ட்ரிஸ் என்ற பொன்னிற எழுத்துக்கள் பொறிக்கபட்ட அந்த வானுயர்ந்த வணிக கட்டிடத்தின் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவள் பார்க்கிங்ல் தன் புல்லட் ஐ நிறுத்தி சென்டர் ஸ்டான்ட் ஐ போட்டு நிமிர்ந்தாள் மணிகர்ணிகா....
சென்ற முறை இங்கு வந்த பொழுது அவள் ப்ராஜெக்ட் முடிந்திருக்க, அன்றோடு அவளுக்கும் அந்த அலுவலகத்துக்குமான உறவு முடிந்தது. இனி இந்த பக்கம் தலை வைத்து கூட படுக்க கூடாது என்று எண்ணி இருந்தவள் மறுபடியும் அவன் அலுவலகத்துக்கு அவனை தேடி வரும்படி ஆகிவிட்டது...
அப்படி அவனை தேடி வரும்படி செய்து விட்டான் அந்த துஷ்டன்..
அந்த ப்ராஜெக்ட் முழுவதுமாக முடியும் வரைக்குமே அவள் அவனுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று அவன் போட்டிருந்த ஒப்பந்தத்தை காட்டி அவளை மடக்கி விட்டான்..
ஆனால் தினமும் அலுவலகத்துக்கு வர தேவை இல்லை.. இனிமேல் வேலை கன்ஸ்ட்ரக்சன் நடக்கும் இடத்தில் தான்.. அதனால் அவள் அங்கு வர வேண்டும் என்றும் சொல்லி இருந்தான்..
இன்று ஒரு நாள் அலுவலகத்தில் வேலை என்பதால் அவள் துஷ்யந்த் ன் அலுவலகத்துக்கு வரவேண்டியதாகியது..அதை எண்ணி கடுப்புடன் இன்று கிளம்பி வந்திருந்தாள்..
அவள் கடுப்பை எல்லாம் கிளம்பும் பொழுதே தன் அன்னையிடம் காட்டி எரிந்து விழுந்து வைத்தாள்.. அதே எரிச்சலுடன் அவன் அலுவலகத்தை அடைந்தவள் தன் கோபத்தை எல்லாம் காட்டி அந்த வண்டியை இழுத்து நிறுத்தினாள்...
“சே.. மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல நான் தலை முழுக நினைத்தாலும் இந்த துஷ்டன் என்னை விட மாட்டேங்கிறானே.. இன்னும் நொச் நொச் னு எதையாவது சொல்லி கொண்டே இருக்கிறான்.. “ என்று உள்ளுக்குள் துஷ்யந்த் ஐ அர்ச்சனை பண்ணியவாறு அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்தாள்...
வழக்கம் போல ரிசப்சனில் இருந்த பெண் இவளை பார்த்து நட்புடன் புன்னகைக்க, அதில் தன்னை மறைத்து கொண்டவள் நொடியில் இயல்புக்கு மாறியவள் அவளும் அந்த பெண்ணை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தவாறு துஷ்யந்த் அறை இருக்கும் தளத்திற்கு செல்லும் பிரத்யேக லிப்ட் ஐ அடைந்தாள் மணிகர்ணிகா..
அதன் உள்ளே நுழைந்ததும் அங்கு ஏற்கனவே நின்றிருந்த பெண்ணை பார்த்ததும் மணுவுக்கு ஆச்சரியமாக இருந்தது
மேக்னா - இவள் தான் மணு முதன்முதலில் அந்த அலுவலகத்திற்கு வந்த பொழுது லிப்ட் ல் சந்தித்தவள்..
Also sis , so much ezhuthu pizhai . So next time paarthukonga.