(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

மங்கைக்கு மனம் நிறைந்து போனது. சிவகாமி தலையில் கைவைத்து நீ நூறு ருச(ம்) ல்லாயிருப்ப சிவகாமி. இந்த இத சாப்புட்டு வேலைய பாரு வெறும் வயித்தோட எவ்ளோ நேரம் இருப்ப புள்ள.....

சேரிங்க சின்னம்மா.....

இனி தனக்கு கவலையில்லை. சிவகாமி தேன்மொழியை பார்த்துக்கொள்வாள் என்ற மனநிறைவில் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு வேலையை தொடர சென்று விட்டார்.

18 வருடங்களுக்கு பிறகு

சென்னை நகரத்தின் ஹைவே - யில் ஜாகுவார் ஒன்று சீறிபாய்ந்துக்கொண்டு சென்றது. அத்தனை வேகமும் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி என்று பொரிக்கப்பட்ட கட்டிடத்தின் முன்பு நிற்க, அதிலிருந்து கருப்பு நிற முழுக்கை சட்டை, கருநீல கலர் ஜுன்ஸ் அணிந்து கருப்பு நிற கூலர்சை ஒரு கையால் கலட்டிக்கொண்டு மறு கையால் சிகையை கோதியபடி முகம் முழுக்க தாடி மண்டி கிடக்க ஒரு ஆணழகனாய் அவன் இறங்கினான்.

இறங்கி அவன் விறு விறுவென்று சென்ற இடம் தலைமை ஆசிரியர் அறை.

எக்ஸ்க்யூஸ் மீ மேம்.....

எஸ் கமின்.....

ஹாய் மேம் . ஐயம் கார்த்திக். VK க்ரூப் ஆப் கம்பேனிஸ் எம்.டி. கேன் ஐ மீட் மிஸஸ் தேன்மொழி.

நைஸ் மீட்டிங் யு மிஸ்டர் கார்த்திக். ஃபர்ஸ்ட் டேக் யுவர் சீட். என்ன விஷயமா நீங்க அவுங்கள பார்க்கனும்.

கார்த்திக் சின்ன சிரிப்புடன் அவுங்க என் ரிலேடிவ் மேடம்.

ஒ சாரி கார்த்திக். வெளிய கொஞ்சம் வெயிட் பண்ணுக அவுங்கள கூப்புட்றே....

தேங்க்யூ மேடம்.

யுவர் வெல்கம்.

கார்த்திக் வெளியில் உள்ள காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருக்க....தன் எதிரில் உள்ள படிக்கட்டில் பச்சை நிற காட்டன் புடவையில் ஒயிலாக அவள் நடந்து வர ...... அதே குழந்தை முகம் மீன் போன்ற கண்கள், காதில் ஒரு வெள்ளைகல் பதித்த காதணி, கழுத்தில் ஒரு மெல்லிய செயின், அதோடு மஞ்சள் நிறத்தில் ஏதோ இருக்கிறதே..... அப்படியென்றால்........ அவன் தலை எக்கு தப்பாக சுற்ற......இல்லல்ல இது தேன்மொழி இல்ல..... இது யாரோ கடவுளே இவ என் தேன்மொழி - யா இருக்கக்கூடாது இருக்கக்கூடாது. அவன் மனதில் பிதற்றிக் கொண்டு இருக்க......

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.