(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தூங்கியிருந்தாள்.

மாலை ஏழு மணிக்கு எழுந்தவளை, “அம்மா எந்திரிச்சிட்டா, டீ கொண்டுவாங்க!” என்ற சத்யாவின் குரல் குழப்பியது.  ஏற்கனவே இது இரவா, பகலா என்ற குழப்பத்தில் எழுந்தவள்,  “சத்யா நீயா? ஆமா  நீ எப்போ இங்கே வந்தே?” என்றாள்.

ஆமாடி நான் தான், உன்னோட எக்ஸாம் எப்படிப் பண்ணணு கேட்போம்னு தான் வந்தேன். நீ என்னடான்னா கோபமா தூங்கிட்டேன்னு அம்மா  சொன்னாங்க. உன்னை எழுப்பாமல் இரண்டு மணி நேரமா உக்கார்ந்திட்ருக்கேன்.

லூஸு லூஸு அம்மாகிட்ட சொல்லி எழுப்பவேண்டியது தானே. இரு ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன். அம்மா சத்யா டீ குடிச்சாளா? குடிச்சிட்டா. இந்தா உன்னோட டீ என்றவரிடம்,  மாடில அவளோட புக்ஸ் இருக்கு போய் எடுத்துட்டு வர்றோம் என்றவாறே படிகளில் ஏறினார்கள்.

அறைக்குள் நுழைந்த மறுநிமிடம்,  “உன்னோட ரிசல்ட் என்னடி ஆச்சு?, சத்யா பேரார்வத்துடன் கேட்டாள்.
பெயில் தான் ! என்றாள் ரம்யா உதடு சுழித்து, பெருவிரல் கவிழ்த்து

“என்ன ரம்யா சொல்ற? தினேஷ் புடிக்கலன்னு சொல்லிட்டானா?” என்றாள் சத்யா வியப்பாக

அய்யயோ நான் இன்னும் அவன் கிட்ட நான் என் லவ்வை சொல்லவேஇல்லை.

அப்புறம் ஏண்டி பெயில்னு சொல்ற

நான் இன்னிக்கு எழுதின ரீ எக்ஸாம் பத்தி கேக்குறன்னு நினைச்சேன்.

நீ அதிலெல்லாம் பாசாகிடுவேன்னு எனக்குத் தெரியும். நான் கேட்டது உன் லைப் எக்ஸாம் பத்தித்தான்

என்னடி பண்றது. எங்க எல்லாருக்கும் கிளாஸ்ரூம் மாத்திட்டாங்க. அவன் கிளாஸ் எங்கேன்னு தெரில. இப்போ இந்த எக்ஸாம் டென்ஷன் வேற. எப்ப தான் அவன்கிட்ட சொல்லப்போறேன்னு தெரில

வர்ற பிப்ரவரி 14 அன்னிக்கு சொல்லவேண்டியது தானே.

எப்படிடி சத்யா சொல்றது,

ஒரு ரோஸ் அப்புறம் ஒரு டெய்ரி மில்க் வாங்கிட்டு போ, அவன் கிளாஸ்ல வெய்ட் பண்ணு. அவன்கிட்ட கொடுத்திரு. அவனே புரிஞ்சிப்பான்.

என்னடி முதலில் திட்டின, இப்போ நீயே ஐடியாவும் கொடுக்கிற.

ஏன்னு தெரியல ரம்யா, நீ சந்தோஷமா இருந்தா தான் எனக்கும் சந்தோஷமா இருக்கும். நீ வருத்தமா இருந்தின்னா எனக்கும் கஷ்டமா இருக்குடி. உன்னோட காதல் சரியா தப்பான்னு நான் ஆராய்ச்சி பண்ணல. உனக்கு பிடிச்ச ஒருத்தர நேசிக்கிற, அதுக்கு யார் என்ன தடை பண்ண முடியும். காதல் மனித இயல்பு தானே.

6 comments

  • ஏதாச்சும் புடிக்காத மாதிரி நடந்தா சென்டிமென்ட் மேல பழி போட்டுடுட வேண்டியதுதான் :lol: நன்றி தோழி
  • Breakfast kuduthadhu oru kuthama :D nalla senti rum's 👌 I did have many such 😜 Sathya and ramya oda frndship semma 👏👏 cool and interesting update ma'am 👏👏👏👏👏👏<br />What next???<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.