(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

இப்போ நீ பேசறதும் யதார்த்தம் தான். ஆனால் அம்மா, அப்பாவை நினைச்சி பயமும், பாசமும் தடுக்குது. அவன்கிட்ட போய் சொல்லிட்டு, பின்னாடி அவன் மனசை உடைச்சிரக் கூடாது. அதனால சொல்லாமலே இருக்கலாம்னு கூட தோணுது.

அன்னிக்குத் தான் எது வந்தாலும் பார்த்துக்குவேன். அவன்கிட்ட சொல்லியே தீருவேன்னு சொன்ன. இப்போ ஏன் ரம்மி மறுபடியும் குழப்பம்.

ஹ்ம்ம். சீக்கிரம் தெளிவா ஒரு முடிவெடுத்து ஆகணும்.

சரி, நான் இங்கே வந்து நேரமாச்சு. வீட்ல என்னை அம்மா தேடுவாங்க. நான் கிளம்புறேன் என்று சத்யா விடைபெற, சில நிமிடங்களில் தொலைபேசி கிணுகிணுத்தது.

“அவன் தான்! அவன் தான்!” என்றே மனம் சொல்ல, “எதிர்முனையில் ஒரு குரலும் இல்லை!” திடீரென இணைப்பு துண்டிக்கப் பாடவும், சரிடி வைக்கிறேன் குட்நைட் என்று பாவ்லா செய்தாள்,

யார் சத்யாவா? வீட்டுக்குப் போயிட்டேன்னு சொல்ல ஒரு போனா? என்று அம்மாவே பதில் தர, ஆமா என்று சொல்லிவிட்டு தன்னறைக்குச் சென்று விட்டாள்.

இரவு உணவு வேளையில், அம்மா, “ஊறுகாய் எங்கே இருக்கு ரம்யா?”

“தினேஷ் மேல இருக்குமா?”

“என்ன சொல்ற நீ”

“டேபிள் மேல தான்மா இருக்குன்னு சொன்னேன்!”

“வேற எதோ பேர் சொன்ன மாதிரி இருந்துச்சே!”

இல்லைமா , டேபிள் மேல தான்னு சொன்னேன்.

அம்மா தொடர்ந்து கேள்வி கேட்பதற்குள், மாடிக்கு விரைந்துவிட்டாள்.

மறுநாள் வகுப்பில், கவிதா மேம், நேற்று நடந்த பரீட்சை பற்றி கேட்கவும், கடினமான விடைத்தாள், பர்ஸ்ட் இயர் மாணவர்கள் ரிசல்ட் ரொம்ப அடிவாங்கும் என மாணவர்கள் சொன்னார்கள். அப்போ மறுதேர்வுக்கு ஒரு மறுதேர்வு வைக்க சொல்வோமா என்று சிரித்தப்படியே மேம் கேட்க, “எக்ஸ்கியூஸ் மீ மேம், சர்க்குலர்!” என்று டிபார்ட்மென்ட் பியூன் வந்திருந்தார்.

மேம், அதை வாசிக்க ஆரம்பிக்கு முன்னரே, சர்க்குலரில் என்ன வந்திருக்கு மேம்?குட் நியூஸா பேட் நியூஸா என முன்போலவே ஒரு மாணவன் கேட்கவும்.

குட்  நியூஸ் என மேம் சொல்லவும், ஓகோவென்று ஒரே குரலில் வகுப்பு முழுதும் எதிரொலித்துவிட்டு, என்ன அந்த நியூஸ் என்பதாக மேமின் முகத்தைப் பார்த்தது.

இன்னும் இரண்டு வாரத்தில், டிபார்ட்மென்ட் சிம்போசியம் வரப்போகுது. நீங்களும் கண்டிப்பாகக் கலந்துக்கணும்னு ஹெச் ஓடி தகவல் அனுப்பியிருக்காங்க.

6 comments

  • ஏதாச்சும் புடிக்காத மாதிரி நடந்தா சென்டிமென்ட் மேல பழி போட்டுடுட வேண்டியதுதான் :lol: நன்றி தோழி
  • Breakfast kuduthadhu oru kuthama :D nalla senti rum's 👌 I did have many such 😜 Sathya and ramya oda frndship semma 👏👏 cool and interesting update ma'am 👏👏👏👏👏👏<br />What next???<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.