(Reading time: 5 - 10 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

தொடர்கதை - நல்ல முடிவு - 14 - ரவை

க்கீலை, மற்ற குடியிருப்போர், சூழ்ந்து கொண்டு கட்டியணைத்து முத்தம் தந்து திணறடித்தனர்

" இருங்க! மூச்சு முட்டுது நிறுத்துங்க!" என வக்கீல் அலறியபிறகே, மற்றவர்கள் அவரை விடுவித்தனர்.

" பிய்த்து உதறிட்டீங்க! இனிமேல் நீங்களே சிபாரிசு செய்தால்கூட, வேறெந்த தீர்ப்பையும் ஒத்துக்கொள்ள மாட்டோம். ஊக்கத்தொகை முழுவதும் நமக்கே!"

" வக்கீல் சார்! திடீர்னு எங்கிருந்து அந்த யோசனை உங்களுக்கு கிடைத்தது? நாம் பேசிக்கொண்டது அதிக பட்சமா, பத்து லட்சம்தானே?"

" சத்தியமா சொல்றேன், எனக்கே அந்த வாதம் அந்த நிமிடத்தில்தான் தோன்றியது எல்லாம் மேலே உள்ள சக்தி செய்கிற அதிசயங்கள்!"

" உண்மை! உங்களுக்கு என்ன ஃபீஸ் உண்டோ, அதை நீங்க எடுத்துண்டு மீதியை எங்களுக்கு வாங்கித் தந்தா போதும்!"

" சேச்சே! இதை நான் வக்கீலா செய்யலே! உங்களைப்போல ஒரு குடி இருப்பவனாகத்தான் பேசி வாதாடினேன். பார்ப்போம், போகப் போக என்ன முடிவு என்று!"

 அதே நேரத்தில், இருபது ஓனர்களும் கூடி தங்கள் கடுங்கோபத்தை வெளிப்படுத்தினர்.

" இது ரொம்ப ஷாக்கிங்! ஓனருக்கு ஒரு பைசாகூட கிடையாது, ஐம்பது லட்சமும் எங்களுக்கே என்று வக்கீல் முழங்கறான்! பாவிங்களா! வீடே எங்களுதுன்னுகூட சொல்லுடுவீங்க போல இருக்கே......."

" மிரட்டல் வேறே! அவங்க ஒத்துழைப்பு இல்லாம நாம விற்கவே முடியாதாமே! பிளாக்மெயில் பண்றாங்களா?"

" தலைவரே! இதுக்கா ஊர்விட்டு ஊர் ஓடிவந்தோம்? ஆமாம், அவங்களுக்கு யார் நாம செட்டியாருடன் பேசின விவரங்களை சொல்லி இருப்பாங்க, துரோகி!"

" அது ஒண்ணும் பெரிய விஷயமில்லே! இங்கேயே வசிக்கிற ஓனர்கள், தங்கள் குடும்பத்தாருடன் விவரங்களை பகிர்ந்து கொண்டிருப்பாங்க! அதிலே ஒரு ரெண்டுங்கெட்டான் சிறுவன்கூட, தன்கூட பழகற குடியிருப்பவர் மகனிடம் தெரிவித்திருப்பான்......"

" சரி, இப்ப என்ன செய்வது?"

" விற்கிற யோசனையை கைவிட்டு, முதல்லே குடி இருப்போரை விரட்டிடுவோம் பிறகு செட்டியாரை அழைத்து பேசுவோம்......."

" செட்டியார் அதற்கு ஒத்துக்கணுமே! தவிர, குடி இருக்கிறவங்களை விரட்டும் வேலை அத்தனை சுலபமல்ல! அவங்க முரண்டு பிடித்தால், கோர்ட்டு, கேஸ்னு பல வருஷம் ஆகுமே.....!"

" இதப் பாருங்க! ஒரு பத்து ஓனர்களுக்காக, மறு பத்து ஓனர்கள் நஷ்டப்பட வேண்டுமா?

6 comments

  • Good morning dear Adharva! கதையை சொல்லுக்குச் சொல் ஆழ்ந்து படித்து ரசித்து பாராட்டுகிற தங்கள் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடனே!
  • Habbaba :eek: oru angle viduradhu illai 😁😁 eppadi thangalukku profit varavaika mudiyumanu analysis nadathinadhey nadathinadhu 😱😱😜 non stop discussion!! Interesting update uncle 👏👏👏👏👏 realy curious to hear the final call.<br />Thank you.
  • Good morning dear Madhumma!எனக்கு முன்பே தாங்கள் படித்து எண்ணங்களையும் தெரிவித்துள்ளீர்கள். சில்சீயில் என் துவக்கத்திலிருந்து தொடர்ந்து என்னை ஊக்குவித்து வருகிறீர்கள். மிக்க நன்றி!

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.