(Reading time: 5 - 10 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

கொஞ்சமா, நஞ்சமா? ஒண்ணரை கோடி! ஏதாவது கொஞ்சம் இறங்கி வந்து சமரசம் பேசுங்க! நல்ல முடிவை சீக்கிரம் எடுத்து பணம் வாங்கற வழியைப் பாருங்க!"

" மறு பத்து ஓனர்களில் ஒருவர், ரெண்டு பேருக்கும் பொதுவா, நியாயமா ஒரு தீர்வு சொல்லுங்க! அதை நாங்க ஏத்துக்கிறோம்." என ஒரு ஓனர் சொன்னதும் இதர பத்து ஓனர்களும் 'நோ' என குரல் எழுப்பினர்.

" இங்க வசிக்கிற பத்து ஓனர்கள் ஆளுக்கு ஒண்ணரை கோடி வாங்கப் போகிறபோது, நாங்க குறைத்து வாங்க, இளிச்ச வாயன்களா? வேண்டாம், விற்கவே வேண்டாம்....."

" தலைவரே! இதென்ன புதுக் கதையா இருக்கு! குடி இருப்பவங்களுக்கும் ஓனர் களுக்கும் இடையே துவங்கி, சண்டை, ஓனர்களுக்குள்ளே வந்துடுத்தே, தலைவா! வாயை மூடிண்டிருந்தால் எப்படி? பேசுங்க!"

" நானும் உங்களைப் போல ஒரு ஓனர். இங்கேயே வசிக்கிற ஓனர். பாதிப்பு இல்லாத ஓனர்! நான் எது சொன்னாலும், அதை மற்ற பத்து பேர் ஏத்துக்க மாட்டாங்களே, அதனாலே, அவங்க பத்து பேரில் ஒருவர் தீர்வு எது சொன்னாலும், நாம ஏத்துப்போம்....."

" கரெக்ட் தலைவா! சரி, யார் சொல்லப்போறீங்க?"

" அதுதான் முடியாதுனு சொல்லிட்டோமே, விடுங்க!"

" அதெப்படி விடறது? ஒண்ணரை கோடி! நீங்க தருவீங்களா? ஆமாம், குடி இருப்பவங்க கேட்பது நியாயம்தானே, யார் காலி பண்றாங்களோ, அவங்களுக்குத்தானே அந்த ஊக்கத்தொகை சேரணும்? காலி பண்ணாத ஓனர்கள் கேட்பதிலே என்ன நியாயம்?"

" வாய்யா, தர்மராசா! காலி பண்ற வீடு யாருக்கு சொந்தம்? காலி செய்தால் போதுமா? பிளாட்டை கிரயம் செய்து கொடுப்பது ஓனரா, காலி செய்தவங்களா?"

" கிரயம் செய்யத்தான் ஒரு கோடி கிடைக்குமே!"

" இருங்க, இருங்க! ஒரு யோசனை! குடி இருப்பவங்க காலி செய்தால், மனையை விற்று கிடைக்கும் பணம், இருபது ஓனர்களுக்கும்தானே! அதனாலே, இருபது ஓனர்களும், குடியிருக்கிற பத்து பேருக்கு தருகிற பணத்தை, பங்கு போட்டுக் கொண்டால், பிரச்னை தீர்ந்துடும்.....தலைவரே! என்ன சொல்றீங்க?"

" எந்த முடிவானாலும் நான் ஏத்துக்கிறேன்....."

" அப்படி ஒதுங்கினா, எப்படி? நீ பேசி தீர்த்துவை, தலைவா!"

" என்மீது நம்பிக்கை வைத்து நான் சொல்கிறதை எல்லோரும் ஒருமனதா ஏத்துக்கறதா இருந்தால், சொல்றேன்......."

" ஏத்துக்கறோம்..." " குடியிருப்பவர்கள் ஒற்றுமை யுடன் முடிவு எடுக்கிற உரிமை யை, குடியிருக்கும் வக்கீலிடம் கொடுத்து இருக்காங்க! அதில் உள்ள சௌகரியம், அவர் ஒருவரே

6 comments

  • Good morning dear Adharva! கதையை சொல்லுக்குச் சொல் ஆழ்ந்து படித்து ரசித்து பாராட்டுகிற தங்கள் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடனே!
  • Habbaba :eek: oru angle viduradhu illai 😁😁 eppadi thangalukku profit varavaika mudiyumanu analysis nadathinadhey nadathinadhu 😱😱😜 non stop discussion!! Interesting update uncle 👏👏👏👏👏 realy curious to hear the final call.<br />Thank you.
  • Good morning dear Madhumma!எனக்கு முன்பே தாங்கள் படித்து எண்ணங்களையும் தெரிவித்துள்ளீர்கள். சில்சீயில் என் துவக்கத்திலிருந்து தொடர்ந்து என்னை ஊக்குவித்து வருகிறீர்கள். மிக்க நன்றி!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.