(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

     அந்த பெண்மணி அங்குள்ள சிறு குழந்தைகளின் உயரத்திற்கேற்ப குனிந்து  பேச்சுக்கொடுத்துக்கொண்டே, கார்த்திக்-கை பார்த்துவிட்டார்.

அங்க பாருங்க கார்த்திக் அங்கிள் வந்துட்டாங்க.

 ஐ கார்த்திக் அங்கிள்.....என்று பூஜா அவனிடம் ஓடி வர......

ஏய் செல்லக் குட்டி எப்புடி இருக்கிங்க என்று அவன் பூஜாவை தூக்கி சுற்ற...... மற்ற மழலைகளும் அவனை சுற்றி கொண்டனர். அவன் மிகுந்த உற்சாகமாக அவர்களிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.

மழலைகளை கண்டவுடன் நம் துன்பங்கள் அனைத்தும் எங்கு தான் ஓடி ஒளிந்து  கொள்கிறதோ....... இவ்வுலகில் மழலை சிரிப்பில் மயங்காதவர் உண்டோ.......

கார்த்திக் அந்த பூங்குவியலில் தன்னை மூழ்கடித்து கொண்டு அவர்களுக்கு இணையாக பேச ......

அதில் பூஜா என்னும் பட்டு குட்டி.....  கார்த்திக் அங்கிள் இவ்ளோ நாள் எங்க போனிங்க... என்ன பார்க்க ஏன் வரல என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்க...... அதில் அவன் புன்னகை பெரிதாக....

அங்கிள் ஆஸ்திரேலியா போயிருந்தனா அதா பூஜா குட்டிய பாக்க வர முடில....... சாரி...... இனிமே பூஜா குட்டிய பார்க்க கரெக்டா வந்துடுவனா சரியா செல்லம்.

ம்ம்..... சரி அங்கிள் என்று பூஜா சிரிக்க..... அவனும் அவர்களுடன் விளையாடிவிட்டு..... அந்த பள்ளியின் கரஸ்பாண்டட் அறையை நோக்கி நடையை போட்டான்.

அங்கு அபிராமி கரஸ்பாண்டன் - கே    உரிய தோரணையுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். கதிருக்கு எங்கிருந்து கதிருக்கு  இவ்வளவு கம்பீரம் வந்தது என்பதை கார்த்திக் நன்கு உணர்ந்து கொண்டான்.

நீங்க யோசிக்கிறது கரெக்ட் தான் நண்பர்களே அபிராமி தான் கதிரோட அம்மா. மிகவும் அன்பானவர். ஆனால் நிர்வாகத் திறமை அதிகம் கொண்டவர். சரி வாங்க அவங்க இப்ப என்ன பேசுறாங்கன்னு கேட்போம்.

மே ஐ கம் இன் அபிம்மா.....

எஸ் கம் இன் மை சன்....

கார்த்திக் சிரித்த முகத்துடன் அவருக்கு எதிரே அமர்ந்து எப்படி இருக்கீங்க அபிம்மா..

என்ன பாத்தா எப்படி தெரியுது.

ம்ம்...... என்று யோசிப்பது போல் பாவனை செய்து அவரைக் கூர்ந்து கவனித்து இளச்சி போயிட்டீங்க அபிம்மா....

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.