(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

டேய் .........

கண்ணை சுற்றி கருவளையம் வந்துடுச்சா அபிம்மா....... நீங்க தூங்குறீங்களா இல்லையா.

அவன் விளையாட்டாக கேட்கிறான் என்று எண்ணிக்கொண்டிருந்த அபிராமியும் அவன் கடைசியில் கவலையுடன் முடித்ததில் சிறு கசப்பான சிரிப்பை உதிர்த்தார்.

எல்லாம் ஒன்னோட ஃபிரெண்ட் பத்தின  கவலை தான்டா.

அவனுக்கு என்ன அபிம்மா நல்லா ஜம்முனு ஊர் சுத்திட்டு இருக்கா.......  சமைச்சு போடுறதுக்கு நான் இருக்கேன். நீங்க எதுக்கு கவலைப் படுகிறீங்க..

அது சரி உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. நீயும் ஒன்டிகட்டயா தான சுத்திட்டு இருக்க....... ரெண்டு பேரும் எப்ப கல்யாணம் பண்றதா உத்தேசம். வயசு ஏறிட்டே போகுதில்ல....

என்ன அபிம்மா .... எங்களுக்கு இப்ப என்ன வயசு ஆகி போயிருச்சுன்னு நீங்கள் கல்யாணத்தை பத்தி பேசறீங்க.

என்ன வயசு ஆகி போயிடுச்சா இன்னும் ரெண்டு வருஷத்துல ரெண்டு பேரும் அரைக் கிழவன் ஆகிடுவிங்கடா.

கார்த்திக் அவரை போலியாக முறைக்க அதில் அபிராமி சிரித்து விட்டார்.

போதும் கார்த்திக் விளையாண்டதெல்லாம் எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க. ரெண்டு பேருக்குமே நான் பொண்ணு பார்த்துறவா.

ஐயோ அபிம்மா என்ன விட்டுருங்க. வேணும்னா கதிருக்கு நீங்க பொண்ணு பாருங்க அவனை பேசி நா சரி பண்ணிடுறே... டீல் ஆ....என்பது போல் வலது கை கட்டை விரலை உயர்த்திக் காட்ட.

சிறிது நேரம் யோசனையில் மூழ்கி இருந்த அபிராமி கார்த்திக்கும் நாம பையன் தான் இவனை விட்டுட்டு எப்படி நாம கதிருக்கு பார்க்கிறது. கதிருக்கு கல்யாணம் பண்ணா ஆட்டோமேட்டிக்கா கார்த்திக்கும் கல்யாணம் பண்ணிக்குவான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பதுபோல்  அவர் திட்டம் தீட்ட..........முகத்தில்  மென்னகை படர சரி ஓகே டில்..... என்பது போல் அவரும் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

குட் அபிம்மா...... மனதிற்குள் நல்லவேளை நான் தப்பிச்சேன்.

இன்னொரு முக்கியமான விஷயம் அபிம்மா உங்களுக்கு பொண்ணு தேடுற கஷ்டமான வேலையை நான் கொடுக்கல..... ஏன் னா நம்ம ஆபீஸ்ல வொர்க் பண்ற அனிதா கதிர ஒரு ஏழு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கா...... பேசாம நீங்க அவுங்க வீட்டுக்கு போய் பேசி பாருங்க---- அனிதா ரொம்ப நல்ல பொண்ணு .... நான் பார்த்தவரை அனிதா கதிருக்கு பொருத்தமா இருப்பா. பொறுமையும் ஜாஸ்தி நீங்க போய் பாருங்க  பார்த்துட்டு உங்களுக்கு

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.