(Reading time: 8 - 16 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

எதிலும் மனதை ஈடுபடுத்தி உன்னோட எதிர்காலத்தை வீணாக்கிறாத! உன்னை என்னோட தங்கை மாதிரி நினைக்கிறேன். அதான் இதை உன்கிட்ட சொல்றேன்! என்றார். “நிச்சயமா மேம்! படிப்புல என்னோட முழுக்கவனமும் இருக்கும்! தேங்க்ஸ் மேம்!” என்றாள் சற்றுத் தடுமாறிய குரலில். “சரி போவோமோ! என்று எழுந்தவர், இப்போ நான் சொன்னபடியே என்னிக்கும் இருந்தேனா, நீ தான் பெஸ்ட் ஸ்டூடண்டா இருப்ப! என்றார். இருவரும் வீடு  திரும்பியதும், ரம்யாவின் அம்மா அப்பாவிற்கு நன்றி கூறி விடைபெற்று கவிதா மேம்  தனது ஊருக்குக் கிளம்பினார். பேருந்து நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி விட்டு, வீடு திரும்பியவள் வராண்டாவில் செருப்புகளைக் கழற்றும் போதே, ஹாலில் போன் அடிக்கும் சத்தம் கேட்டது.

படபடவென்று ஓடி வந்து எடுத்ததும், மிக ஆவலாக “ஹலோ!” எனவும், எதிர்முனையில் கண்மணியின் குரல். என்னடி என்னவோ என் போனை எதிர்பார்த்துட்டே இருந்த மாதிரி டோன்ல ஹலோன்னு சொல்ற என்றாள். நீயே ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்னு போன் பண்ணுவ. நான் என் ஸ்கூல் பிரெண்ட் சத்யான்னு நினைச்சேன் ரம்யா சொல்லவும், சரி! விஷயத்துக்கு வரேன். அன்னிக்கு கொஞ்சம் அப்செட்டா இருந்தேன்ல, அந்நேரம்  ப்ரோக்ராம் போட மைன்ட் வரல, கம்ப்யூட்டர் பிராக்டிஸ் லேப்ல ரெண்டு ப்ரோக்ராம் பண்ணனும். நான் எனக்கு சிக்னல்ஸ் லேப் மேம்கிட்ட பெர்மிசன் கேட்ருக்கேன். ஒரு அரைமணி நேரம் மட்டும், நீ வொர்க் பண்ற கம்ப்யூட்டர் யூஸ் பண்ணிக்கிறேன் ஓகே வா!” என்றாள். “இதை போன் பண்ணி கேட்கனுமாடி! நீ நேரா லேப்க்கு வரலாம். சார் ஒண்ணுமே சொல்ல மாட்டார்! அதுவுமில்லாம, அவர் பைனல் இயர் கிளாசுக்கு ஒரு செஷன் போய்டுவார். லேப் அட்டெண்டர் மட்டும் தான் இருப்பாங்க. அவங்களும் கண்டுக்க மாட்டாங்க! என்றாள் ரம்யா.

“எனக்குத் தெரியும் உன்னோட லேபுக்கு வர்றதுல்லாம் பிரச்சினையில்லைன்னு. நேத்து கார்த்திக் காலேஜ் வரல, அவனோட குரலைக்  கேட்கணும் போலிருக்கு. உனக்கு போன் பண்ணப் போறேன்னு  அம்மாகிட்ட பெர்மிஷன் கேட்டேன், சரின்னு விட்டாங்க, இப்போ உன் போன்காலை கட் பண்ணிட்டு, அப்படியே அவனுக்கு போன் பேசிட்டு வைப்பேன்! அடிப்பாவி இதுக்குத் தான் எனக்குக் கால் பண்ணியா என்ற ரம்யாவிடம், சாரிடி,  எனக்கு வேற வழி தெரியல, என்றவள் இணைப்பைத் துண்டித்தாள். காதலில் தான் எத்தனை தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கு என்று நினைத்தவள், கோவிலில் தன்னிடம் கவிதா மேம் கூறியதை சிந்திக்கத் துவங்கினாள். மேம், தினேஷ் சிம்போசியத்தில் தன்னையே சுத்திச் சுத்தி வந்ததையும், அங்கே அவன் குறுகுறுன்னு என்னையவே பார்த்துட்டு இருந்ததை வச்சுத்தான் எனக்கு அட்வைஸ் பண்ணிருப்பாங்களோ! அப்படிலாம் இருக்காது! இல்லையில்லை பொதுவா

6 comments

  • சில நேரம் சிலர் பேசுறது அப்படி தான் இருக்கும்ல தெரிஞ்சு சொல்லறாங்களா இல்லை யதார்த்தமா சொல்லறாங்களான்னு புரியாமல்! :sigh: நன்றி தோழி!
  • Kavi, just like that sonnangala illa did she notice dinesh and ramya :Q: idha sollave Anga poi stay pana mathiri irukke :Q: interesting update ma'am 👏👏👏👏👏 look forward to see what happens next.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.