(Reading time: 5 - 9 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

  இது மாற்றமுடியாத முடிவு! என் அப்பன் உத்தரவு! என் மனைவியுடன் நான் அடுத்த வாரம் அங்கு வருகிறேன்.

  எல்லோரும் சேர்ந்து பேசி மேற்கொண்டு முடிவு எடுக்கலாம்.

 கலாவிடம் சொல்லு!"  நிரஞ்சனுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது.

" சரி, செட்டியார்! இன்று இங்கே ஏற்பாடாகியிருந்த அக்ரிமெண்ட், அட்வான்ஸ் எல்லாவற்றையும் நிறுத்தி விடுகிறேன். அடுத்த வாரம் நேரில் மற்றதை பேசுவோம்."

 " இன்னும் இதை என் மனைவியிடம்கூட சொல்ல வில்லை. வச்சிடவா?"

 " சரி, செட்டியார்!"  நிரஞ்சன் இந்த புதிய செய்தியை தெரிவிக்க, கலா, சேகர் இருவரையும் தேடிச் சென்றான்.

 கலா மெல்லிய சிரிப்பை உதிர்த்துவிட்டு ஏதும் பேச வில்லை. சேகரோ, சோகம் முகத்தில் பரவி, " நாம் கோடீஸ்வரன் ஆகவே முடியாதாப்பா?" என்றான் ஏமாற்றத்துடன்.

 நிரஞ்சன் வாய்விட்டு சிரித்து, " சேகர்! நூறுகோடி அதிபதி செட்டியாரின் வாரிசு நம்ம குடும்பம்! நாம் கேட்கிற பணத்தை தரும்படி அவருக்கு உச்சிப் பிள்ளையார் ஆர்டர் போட்டிருக்கார்டா! அடுத்த வாரம், மனைவியுடன் நம்ம செட்டியார் இங்கு வந்து நம்முடன் தங்கி நிதானமாக இன்னும் பல விஷயங்களை சொல்லப் போகிறார்....."

" இப்ப புரியுதா? நாம் நேர்மையாக நடந்தால், செல்வம் நம்மை தேடிவரும், என்று புரியுதா?"

" யு ஆர் கரெக்ட், கலா! சேகர்! அம்மா சொல்கிறபடி நாம் பணத்தைத் தேடி அதற்கு அடிமையாகாமல், நேர்மையோடும் நாணயமாக வும் நடந்துகொள்ளணும்னு! சரி, முதல்லே, ஓனர்களுக்கு விஷயத்தை போனில் உடனே சொல்லிடறேன்....."

அதற்குள், வாசற்கதவு அழைப்புமணி ஒலிக்கவே, கதவை திறந்தான் சேகர்.

 " ஓனர்கள் எல்லாரும் வந்து கீழே காத்திருக்காங்க ஐயாவைப் பார்க்க!" என்று செக்யூரிடி சொல்லிவிட்டுப் போனான்.

 நிரஞ்சன் உடனே கீழே சென்றான்.

" தலைவரே! எங்களைவிட எங்க மனைவி அறிவாளி! அவள் கேட்கிறாள், 'ஐந்து லட்சத்துக்காக, ஐம்பது லட்சத்தை இழந்து நிற்கிறீங்களே'ன்னு! அதனால் நாங்களே பத்து லட்சம் எங்க பிளாட் டென ன்ட்டுக்கு தர சம்மதிக்கிறோம். இந்த மாத முடிவதற்குள் பிளாட்டை காலி செய்கிறோம். ஊக்கத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யுங்க!" என்று கோரஸ் பாடினர்.

அப்போது அங்கு வந்த வக்கீல் மோகனும் " தலைவா! நாங்களும் பத்து லட்சத்தை ஏற்கிறோம். ஏன்னா, ஆறுமாதங்களிலே, எப்படியும் ஒரு பைசாகூட இல்லாம, காலி பண்ணியாகணும்...."

7 comments

  • Lol 😂😂😂 haiyooo haiyooo :D I was very sure their peraasaigal won't be fullfilled :lol: practical ah yosich oru terms kk vara timely ippadi oru unhappy news sollitangale... :grin: saddening to see their disappoints but as they accepted the reality idhu nalla mudivu than uncle 👏👏👏👏👏 :hatsoff: good job.👍<br />Certainly honesty will be paid. <br /><br />Thank you and best wishes for your future endeavours.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.