(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

   காபி அருந்திக் கொண்டே அவளைப் பார்த்தவனின் பார்வை அவள் இடையில் நிலைத்தது. காலையில் அவன் பிடித்த போது இருந்த மென்மையை உணர்ந்தவன்.அதை பார்த்துக்கொண்டே காபியைப் பருகினான்.

    டீடைல்ஸை எடுத்தவள் அவனிடம் நீட்டுவதற்காக நிமிர.... அவன் பார்வை சென்ற திசையை கண்டவள். உடனே புடவையை இழுத்து மறைத்துக் கொண்டால் ஒருவித தடுமாற்றத்துடன் அவனிடம் காகிதத்தை நீட்ட...

      அவனும் தன்னை சமன்படுத்தி கொண்டு அதனை வாங்கியவன் விருட்டென்ற நடையுடன் வெளியேறினான்.

      பெரிய பெரிய பூச்சிகளாக இழுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள். சிரின் நான சிரிப்புடன் கதவை மூட அதனை முழுதாக மூடுவதற்குள் வந்துவிட்டால் மீண்டும்.

என்... என்ன சார்.

கீ... அவள் முகத்தை பாராமல் எங்கோ பார்த்தபடி அவன் கூற,

உடனே உள்ளே சென்றவள் அவள் அமர்ந்திருந்த சோபா துலாவினாள்.

கீ இருக்கா.....என்று அவன் வெளியே இருந்தபடியே குரல் கொடுக்க,

இல்ல சார் நான் தேடிட்டே இருக்கேன்.

oh god அங்க தான் இருக்கு wait நானே வரேன்.

அவன் சோபாவின் ஒரு மூலையில் துலாவ இதனை எதிர்த்த சோபாவில் தேடினாள்.

இருவர் தேடியும் எதுவுமே கிடைக்கவில்லை அவள் முழுதாக தேடியப்பின் களைப்பில் அமர,

அவனும் தேடி முடித்து வியர்வையைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்தான்.

நிமிர்ந்தவனின் பார்வை அவளுக்குப் பின்னே சென்றது. சோபாவின் இடுக்கில் கார் சாவி மாட்டிக் கொண்டிருக்க அதனை பார்த்தவன். எதையும் யோசிக்காமல் அதனை எடுக்கப் போக சாவியை கையில் தொட்டவன். அப்பொழுதுதான் உணர்ந்தான் அவளின் முகம் மிக அருகில் இருப்பதை அவளுடைய கண்கள் இறுக்கமாக மூடியிருந்தன அவளின் வாசனை அவனை தாக்க... அவளின் அதரத்தின் அழகை இரசித்தவன் கீழ் நோக்கி குனிந்து இதழில் தேன் குடிக்க... பெண்ணவளும் தன்னவனின் திடீர் தாக்குதலில் இன்பமாய் மயங்க.. முதலில் சூழலை உணர்ந்து தன்னிலை மீட்டவன். அவளை விட்டு விலக நாணத்தில் அவள் கன்னங்கள் இரண்டும் ரோஜாப் பூவாய் மாற அவனைப் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டாள்.

   நிமிர்ந்தவன் அவளின் தாடையில் ஒரு விரலை வைத்து முகத்தை நிமிர்த்தி அவளை அருகில் இழுத்து வலது காதில் கிசுகிசுப்பாக... நான் எத்தனாவது???

    நொடியில் நாணம் நீங்கி குழப்பம் மேலிட அவனை நோக்கி புரியாது விழிக்க...

24 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.