மல்லிகா ராமு சங்கர் குயிலி ஆசிர்வாதம் அனைவரும் அமர்ந்து இருந்தாலும் அந்த அறை அமைதியாகவே இருந்தது. தொலைக்காட்சி பெட்டி மட்டும் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டு இருந்தது. ஆனால் யாரும் அதில் ஒளிபரப்பு செய்யப்படும் செய்தியை பார்த்ததாகவோ அல்லது அதில் பேசும் தகவலை கேட்டதாகவோ தெரியவில்லை...
அந்த அறையின் அமைதியை கலைக்க விரும்பியவராய் ராமு பேச ஆரம்பித்தார். மல்லிகா... இப்போது உன் கணவன் சத்யா போலீஸ் கஸ்டடியில் இருக்கிறான். நீ போய் பார்த்து விட்டு வாம்மா...
இல்லை அங்கிள்... புஷ்பா அக்கா கிட்ட பேசி இருக்கிறேன். அவர்கள் இங்கு வந்த பிறகு அவர்களோடு சேர்ந்து போகிறேன்.
மல்லிகா ஆன்ட்டி.. உங்களுக்கு எப்போது என்ன தேவை என்றாலும் உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்... உங்கள் உதவி இல்லாமல் கார்த்திக் எதையும் செய்து இருக்க முடியாது என்றான் சங்கர்...
அப்படி இல்லை சங்கர்... கார்த்திக் நல்ல மனதுக்கு நான் இல்லை என்றால் வேறு வழியில் உதவி கிடைத்து இருக்கும். அல்லது அதற்கும் ஏதாவது திட்டம் போட்டு ஜெயித்து இருப்பான் என்றாள் புன்னகை மிளிர...
ஆனால் குயிலியின் கவனம் எதிலும் நிலைக்கவில்லை... கார்த்திக் ஆபத்து இல்லாமல் திரும்பி வர வேண்டும்... அதோடு அம்மா அப்பாவும் திரும்பி பத்திரமாக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருந்தாள்.
புஷ்பா அங்கு வர இருப்பதால் அனைவரும் அங்கு இருந்து கிளம்பி கார்த்திக் ஏற்கனவே ரெடி செய்து இருந்த ஹோட்டலுக்கு சென்றனர்..
ஹோட்டல் அறையில் அமர்ந்து இருந்த குயிலியின் கண்கள் அங்கு பரபரப்பாக செய்தியை ஒளிபரப்பி கொண்டு இருந்த தொலைக்காட்சி பெட்டியில் நின்றது...
வீரப்பெண்ணின் சாதனை... என்று எழுத்துகள் ஓடிக்கொண்டே இருக்க அந்த வீரப்பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தாள்... அந்த புகைப்படம் அவளாயிற்றே....
என்ன நடக்கிறது என்று புரியாமல் அதை அறிந்து கொள்ளும் ஆவலில் செய்தியை கவனிக்கலாளாள்.
"உயிருக்கு உயிர் கொடுக்கும் உழவர்களின் தங்க பெண்...
உயிரை விட உழவரின் உயிரை மதித்த வீரப்பெண்" என்று ஏராளமான வாழ்த்து கவிதைகளுடன் செய்தியை வாசித்து கொண்டு இருந்தாள் ஒரு பெண்....
சற்று நேரத்தில் தேனி மலையில் அவள் உயிரை துச்சமாக மதித்து மலைச்சரிவில் சென்ற
I am still waiting for the reunion konjam.periya lovely finale vachidunga....will come to the award ceremony
Thank you.