(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

நினைக்கிறேன்.

அப்ப சரி அண்ணா நீங்க அனிதா அம்மா கிட்ட பேசி அரேஞ்ச் மேரேஜ் மாதிரி பண்ணிடுங்க. நீங்க இருக்க தைரியத்திலதான் ஓகே சொல்லிட்டு வந்திருக்கேன் அண்ணா.

சரிமா கவலைப்படாத நாம ஜமாய்ச்சுடுவோம்.

தேங்க்யூ அண்ணா.

யுவர் வெல்கம் சிஸ்.

(அனிதாவின் காதல் பற்றி அசோக்கிடம் இருந்து தான் தேன்மொழி தெரிந்து கொண்டாள். ஆனால் கார்த்திக்கிடம் அவள் அதைக் கூற விரும்பாமல் டைரியிலிருந்து தெரிந்து கொண்டது போல் அவனிடம் கூறினாள். அதற்கு காரணம் அசோக்கைப் பற்றி இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தேன்மொழி நினைக்கிறாள்)

உள்ளே சென்ற இருவரும் கை கால் மூஞ்சி கழுவி உடை மாற்றிக் கொண்டு பூனைபோல் எட்டி பார்த்தனர்.

    எட்டிப் பார்த்ததுலாம் போதும் காப்பியும், பாலும் ரெடி வடை கூட சுட சுட இருக்கு வந்து சாப்பிடுங்க.

   இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்து சண்டை போட்டுக்கொண்டே பங்குபோட்டு சாப்பிட்டனர்.

       இவர்களது சேட்டை யை பார்த்து மற்ற இருவரும் சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.

     பிறகு அசோக் விடைபெற அத்தாள் அப்படியே சென்றது.

     அடுத்த நாள் காலையில் தேன்மொழியை அனிதாவை எழுப்பினால்,

அஞ்சு நிமிஷம் மொழி,

சரி என்று காலை வேலைகளை தேன்மொழி பார்க்க சென்றுவிட்டாள்.

   தேன்மொழி வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கும்போது ஸ்வேதாவும் அனிதாவும் கட்டிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அதனை கண்டு சிரித்தவள். இருவரையும் எழுப்பினாள்.

    அனிதா எழுந்து ஸ்வேதாவையும் எழுப்பி  கிளப்பிக் கொண்டிருந்தாள்.

    சமையல் வேலையை முடித்து தானும் கிளம்பி வந்து இருவரையும் பார்க்க...

   அனிதா இரவு உடையில் இருக்க, ஸ்வேதா கிளம்பி ரெடியாக இருந்தாள்.

    என்ன அனி கிளம்பலையா??

   ஓ....உன்கிட்ட சொல்ல மறந்துடேன்ல. ஒன் வீக் லீவ் லேட்டர் கொடுத்துட்டேன் மொழி எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.