(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

நீங்க கொஞ்சமாவே பேசுங்க தேன்மொழி. ஏன்னா இதுக்கே ஆஃபிஸ் டைம் முடிஞ்சுபோச்சு. ( மைண்ட் வாய்ஸ் இதுல லென்ங்தா பேசிருந்தா விடிஞ்சிருக்கும்)

அவன் கிண்டல் செய்கிறான் என்பதை புரிந்தவள். ஈஈஈஈ....... அப்ப நான் கிளம்பவா பாஸ்.

அவனும் அவனுக்கே உரிய சிரிப்புடன். கிளம்புங்க மேடம் என்று ஒரு கும்பிடு போட்டான்.

நேராக வீட்டிற்கு சென்றாள். வீட்டில் யாரும் இல்லாமல் பூட்டியிருந்தது எங்க போச்சுங்க இந்த பக்கிங்க..என்று திட்டிக் கொண்டே வீட்டை சுத்தம் செய்து சமையல் வேலையில் ஈடுபட்டாள். ஏழுமணி வாக்கில் காலிங் பெல் அடித்தது.

யாரென்று தெரிந்தவள் கையில் பிரம்புடன் வெளியே வந்தாள்.

அந்த இருவரும் பின்னே நிற்பவருக்கே பரிசு என்று அறிவித்ததை போல ஒருவர் பின் ஒருவராக மறைந்து கொண்டனர்.

உங்களுக்கெல்லாம் எத்தனை தடவை சொல்றது வெளிய சுத்தாம கரெக்ட் டைமுக்கு வீட்டுக்கு வரணும்னு.

இருவரும் முகத்தை தொங்கப் போட்டு பாவம் போல் நிற்க,

இந்த நடிப்புக் ஒன்னும் குறைச்சல் இல்லை.

ஆனா இன்னிக்கு கண்டிப்பா உங்க ரெண்டு பேருக்குமே பனிஷ்மென்ட் இருக்கு என்று அந்த பெரும்பாலும் இருவர் கையிலும் ஒரு தட்டு தட்ட...

ஸ்ஸ்..... ஆஆ.....தலையைத் தேய்த்துக் கொண்டே இருவரும் அவளை முறைத்தனர்.

என்ன முறைப்பு என்று மீண்டும் ஒரு அடி தலையில் விழுந்தது.

இனி நம்மால் அடிவாங்க முடியாதுடா சாமி என்று இருவரும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட ஆரம்பித்துவிட்டனர்.

மம்மி இவடான் அச்சுகிரீம் வாங்கிடரேன் கூட்டு போனா.....(என்று ஸ்வேதா குட்டி அவளுக்கே உரிய மழலை மொழியில் கூற)

ஏய் புழுகுவண்டி நானாடி சொன்னே நீ தான அஸ்வின் அம்மாலாம் டெய்லி அஸ்வினுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தராங்கலாம்னு  மூக்கால அழுத...

நோ மம்மி அவடான் எனக்கு அச்சுகிரீம் வேணு அழுடா....

அடி அண்டபுழுகி...

இவடான் மம்மி...

இல்ல இவதான்  மொழி....

சபாஷ் சரியான போட்டி என்று பின் பக்கங்களில் கேட்க இருவரும் திரும்பி பார்த்தனர்.

வேற யாரும் இல்ல நம்ம அசோக் தான் இவர்கள் உரையாடலை கண்டு சிரித்துக்

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.