(Reading time: 9 - 17 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

அவளை கடந்து சென்றவன் மனதில் ஒரே ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது. ஜனனியை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசியதில் இருந்து இதுவரை ஒரு முறை கூட ஸ்வேதாவை பார்ப்பதற்கு என்று என் நேரத்தை ஒதுக்கி செல்லவே இல்லையே.... ஏன் என்று மனம் கேள்வி கேட்க அவனுக்கோ அதற்கு பதில் தேட விருப்பமில்லை.

ஆனால் ஏனோ அவளை நினைத்தவுடன் அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழ தன் அலைபேசியில் ஸ்வேதாவின் எண்ணிற்கு அழைத்தான். வழக்கம் போல அழைப்பு ஏற்கப்படவில்லை.

அவன் மறுமுறை முயற்சிக்க முயல்கையில் அப்பா... என்றவாறே ஓடி வந்து கட்டிக் கொண்டாள் தனு.

அவளை அள்ளி தூக்கி கொண்டவன் ஸ்வேதாவிற்கு அழைப்பதை நிறுத்தி விட்டு சாப்பிட அமர்ந்தான்.

தனக்கானதை எடுத்து வைத்து கொண்டவன் முதல் வாய் தனுவிற்கு ஊட்ட மறுக்காமல் வாங்கி கொண்டவள் டாடி நான் சாப்பிட்டு விட்டேன். நீங்க சாப்பிடுங்க என்றாள்.

ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தவன் ஜனனியை பார்த்தான். ஆனால் அவளோ அவன் கண் முன்னால் இல்லை... உணவின் ருசி அம்மாவை நினைவு படுத்த ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

ஆனால் எல்லாவற்றையும் மறைத்து கொண்டு தனு செல்லம்... அம்மா சாப்பிட்டாங்களா என்றான்.

இல்லை என்றவள் ஓடி சென்று ஜனனியை அழைத்து வந்தாள். ஜனனியும் எதுவும் நடக்காதது போல இயல்பாக வந்து அவன் அருகில் வந்து அமர்ந்து சாப்பிட்டாள். அவன் சாப்பிட்டு விட்டு கிளம்பியதும் தான் ஜனனிக்கு ரிலாக்ஸாக இருந்தது.

தனுவை தன் டூவீலரில் அழைத்து சென்று மழலையர் பள்ளியில் விட்டு விட்டு வந்தவள் ஸ்வீனாவிற்கு அழைத்தாள்.

அழைப்பை ஏற்றவள் ஜானு அஸ்விட் யூ எஸ் போறதுக்கு தயராகிறான். நீயும் ஏர்போர்ட் வாரீயா ஜானு என்றாள்.

இல்லை ஸ்வீனா... நெக்ஸ்ட் டைம் வரேன். தனுவை பிக்கப் செய்யனும் என்று சொல்ல ஸ்வீனாவோ ஜானு நானும் ஜெய்ப்பூர் போனும். என்னைக்கு என்று தெரியவில்லை என்று சொல்ல ஜெய்ப்பூரா... என்ன விஷயம் என்றாள் ஜனனி.

இவளிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னாரே... இப்போது என்ன சொல்வது என்று

9 comments

• [quote name="Jeba..."]Thank you dear Uncle... How r u?... How is your health?..[/quote]
Thanks. Managing to be normal.
Dear Jeba! The no. Of readers is close to 2000! Wav! Great!I am proud to be your friend and well-wisher! God bless you!
• குட் மார்னிங் , டியர் ஜெபா! பெண்களின் வாழ்க்கை இப்படியெல்லாம் கயவர்களிடம் சிக்கி சீரழித்துவிட்டு நாட்டில் நடக்கும் உண்மைநிலை! இதற்கொரு விடிவு விரைவில் பிறக்க பிரார்த்திக்கிறேன்!
• Thank you so much dear Jo... Rompa murmam ila... Konjam clear panina neenga story a mudichiduvingale.. ,😀😀😀 janu ku santhegam varumanu therila.. parpom.. Thank you Jo
• Indha series layum etho marmam maranji irukku :yes: :Q: clue kudunga kandupidika :P

dhana konjam head weight than but avalo bad ah iruparunu thonalai so avarai patri rumours spread pananinga patti 😯 kadhal ketpadhu poi nu ungalukku jeba ma'am prove panuvanga wait and watch...
oh avaroda wife sagalaya??? Jana va janu sandhega paduvangala??
Wedding kk piragum Swetha puranama facepalm
Interesting update ma'am 👏👏👏👏👏👏 look forward to see what happens next.
Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.