தன் முகத்தின் அருகில் ரோஜா நிற கலரில் பிராக் போட்டு கொண்டு ஒரு குட்டி குழந்தை இல்லை இல்லை ஒரு குட்டி தேவதை நிற்பதை பர்வதம் அம்மாள் அப்பொழுது தான் பார்த்தார்.
உள்ளேயே சென்ற தண்ணீர் அவரை ஓரளவுக்கு சரி செய்தது. மெல்ல எழுந்து கார் சீட்டில் சாய்ந்தவாறு உட்கார்ந்தார்.
இப்பொழுதும் அந்த பிஞ்சு கைகள் அவரது நெஞ்சை ஆதரவாக தடவி கொண்டு இருந்தது.அந்த தேவதையின் முகத்தில் சிறிது பயமும் அவர்க்கு தெரிந்தது.
மெல்ல அந்த தேவதையின் கையை பிடித்தவர்.... அதன் மேன்மையை உணர்ந்து அந்த குட்டியின் கையில் ஒரு முத்தம் கொடுத்தார்.
பின்னர், மெதுவாக சிரித்து கொண்டேயே.... எனக்கு ஒண்ணும் இல்லைடா கண்ணு..... உன் கையால தண்ணீர் குடிச்சதும் எல்லாம் சரி ஆகிடுச்சு.... ரொம்ப தேங்க்ஸ் டா..... என்றார்.
பாட்டி.... உங்களுக்கு லோ பிரஷர் யா????? என்று மழலை மொழியில் தான் கேட்டாள். ஆனால், அதிலும் ஒரு தெளிவு இருந்தது.
இந்த சிறு வயதிலே எப்படி இந்த குட்டிக்கு லோ பிரஷர் எல்லாம் தெரிகிறது என்று பர்வதம் அம்மாளும் ஆச்சரியப்பட்டார்.
ஆமாம் மா..... அதான் பாட்டி கொஞ்சம் மயங்கிட்டேன்....
உடனேயே தான் மாட்டியிருந்த குட்டி பையை திறந்தவள்..... அதில் இருந்து ஒரு சாக்குலேட் எடுத்து பெரியவாளிடம் நீட்டினாள்.
பாட்டி இந்தாங்க லோ பிரஷர் வரும் போது இனிப்பா எதாவது சாப்பிட்ட சரி ஆகிடுன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க சாப்பிடுங்க .... என்று கூறி கவரை பிரித்து அவரது வாயில் திணித்தாள்.
அவளது அன்பில் உருகிய பர்வதம் அம்மாளும் அதை உண்ண ஆரம்பித்தார்.
இதற்கிடையில், தண்ணீர் வாங்க கடை ஏதும் பக்கத்தில் இல்லாததால் வழியில் தெரிந்த பெண்ணியிடம் தண்ணீர் கடன் வாங்கி தான் கொண்டு வந்த பாட்டில்லில் நிரப்பி கொண்டு வேகவேகமாக காரியிடம் ஓடி வந்தான் ஆதி.
அப்பொழுது காரில் கேட்ட பேச்சு சத்தத்தில் தன்னை மறந்து நின்றான்.
என் ஸ்கூல் இன்னைக்கு சீக்கிரம் விட்டுட்டாங்க பாட்டி ..... நான் வெயிட் பண்ண கார் வரும் ஆனா டைம் ஆகும் அதுக்குள்ள நான் நடந்தேயே போய்டுவேன்....என்னோட மாம் நடக்கறது உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க அதான் நானும் நடந்தேயே வீட்டுக்கு போலன்னு இந்த பக்கம் வந்தேன்.... நான் வந்ததும் நல்லதா போச்சு .... இல்லைன்னா
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Thank you.