(Reading time: 14 - 27 minutes)
Ondru serntha anbu maarumo
Ondru serntha anbu maarumo

தப்புன்னு சொல்லி இருக்காங்க.... இந்த அங்கிள் திரும்ப திரும்ப பொய் சொல்லறாங்க....இது தப்பு..... எனக்கு இந்த அங்கிள் யை  சுத்தமா பிடிக்கலை நெட்டை அங்கிள்.... சீட்டிங் அங்கிள் என்று கத்தினாள்.

அவளது கிச்சு கிச்சு என்ற கத்தல் அவனையும் அறியாமல் ஆதியை வாய்விட்டு சிரிக்க வைத்தது.

அவனை முறைத்து பார்த்தவள்.... உன்னிடம் பேச மாட்டேன் போ.... என்று கூறி பாட்டியின் பக்கம் திரும்பி கொண்டாள்.

ஆதிக்கு நேர் கொண்டு பார்த்த அந்த குட்டியின் கண்கள் வேறு எதையோ ஞாபக படுத்த'முயற்சி செய்தது.

அந்த குட்டியின் மீது இருந்த ஆர்வம் அதை யோசிக்க விடமால் செய்தது.

உன்னோட மாம் பொய் சொல்றது மட்டும் தான் தப்புன்னு சொல்லிருக்காங்களா???? ஸ்கூல் விட்டதும் அம்மாகிட்ட சொல்லாம தனியா வீட்டுக்கு போறது தப்புன்னு சொல்லலையா?????? உன்னை யாராவது'கடத்திட்டு போய்ட்டா என்ன பண்ணுவா????? உன்னோட மாம் பேட் மாம் ஏதும் உனக்கு சரியவேயே சொல்லி தரலையே ...... என்றான் ஏற்ற இறக்கத்துடன்....

உடனேயே அவன் புறம் திரும்பிய குட்டி....நோ நோ ..... என்னோட அம்மா தனியா போறதும் தப்புன்னு சொல்லிருக்காங்க.... என்கூட பிரிண்ட்ஸ் இருந்தாங்க அதான் நான் வந்தேன்.... அதும் இல்லாம இங்க இருக்கறவங்க எல்லார்க்கும் என் அம்மாவை நல்ல தெரியும் அதான் வந்தேன்'அங்கிள். என்னோட  மாம்  சூப்பர்  மாம் பேட் மாம் இல்லை என்றாள் அவனிடம் போட்ட சண்டையை மறந்து.

அப்படியா???? உங்க மாம் இங்க அவ்ளோ பெரிய ஆள் யா???? ஊர்ல இருக்குற எல்லார்க்கும் தெரியுமா???

எஸ் அங்கிள்..... என்னோட மாம் டாக்டர். அதனால இங்க இருக்குற எல்லார்க்கும் அவங்களுக்கு தெரியும்.

இதுவரை அமைதியாக இருந்த பருவதம் அம்மாள்....உன்னோட அம்மா டாக்டர் யா???? அதான், உனக்கு லோ பிரஷர் எல்லாம் தெரிஞ்சு இருக்கா???? பரவயில்லையே, இந்த வயசுலயே உங்க அம்மா உனக்கு எல்லாம் சொல்லி கொடுத்து இருக்காங்க போல?

எஸ் பாட்டி..... நான் அம்மாவோட வயித்துக்குள்ள இருக்கும் போது அம்மாகூட யாரும் இல்லையாம் அப்ப அம்மா என்கிட்ட தான் பேசுவங்களாம்.... அப்பவெயே இது எல்லாம் சொல்லி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்....

அந்த குட்டியின் பேச்சின் முலம் அவளது தாய்க்கு ஏதோ கஷ்டம் இருப்பது ஆதி மற்றும் பார்வதிக்கு புரிந்தது. அதற்கு மேல், ஆதி அந்த பேச்சை வளர்க்க வில்லை.

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.