(Reading time: 14 - 27 minutes)
Ondru serntha anbu maarumo
Ondru serntha anbu maarumo

மருத்துவர்  அறைக்குள் சென்றார்.

அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலியில் பர்வதம் அம்மாள் உட்கார்ந்தார். இப்பொழுதும் ஆதி அபியை தூக்கி கொண்டு இருந்தான். அவளும் இறங்கவில்லை அவனும் இறக்கி விடவில்லை. அபி மழலை மொழியில் கூறும் கதை கேட்டு ஆதி சிரித்து கொண்டு இருந்தான்.

''ரொம்ப நன்றிம்மா.... நீங்க மட்டும் லெட்டர் கொடுக்கலைன்னா.... என் பையனுக்கு டவுன்ல ஆபரேஷன் பண்ணியிருக்க மாட்டாங்க.... நீங்க என் வீட்டு குல தெய்வம்...'' என்று அழுது கொண்டேயே பெரியவர் ஒருவர் கூறுவது மருத்துவ அறையில் இருந்து ஆதியின் காதில் விழுந்தது.

அதனை தொடர்ந்து.... "ஒரு டாக்டர்யா இது என்னோட கடமை.... என்கிட்ட எதும் இல்லாத போது இந்த கிராமம் எனக்கு நிறைய செஞ்சு இருக்கு.... இப்ப, நான் உங்களுக்கு திருப்பி செய்யுறேன் அவ்ளோதான். நான் வெளிநாடு போன பிறகு கண்டிப்பா இதை தொடருவேன். நீங்க இனி பயப்பட வேண்டாம். உங்க பையன் இப்ப முழுசா குணமாகிட்டாரு சந்தோசமா இருங்க".

அபி ஆதியின் காதில் அம்மா குரல் என்றாள் மெதுவாக.

மிகவும் அமைதியான மென்மையான குரல்....ஆனால், இதற்கு முன் எங்கோ கேட்டது போல இருந்தது ஆதிக்கு எங்கேயே என்று யோசிக்கும் போது அவளது மனதில் அல்ட்ரா மாடர்ன் டிரஸ் யில் டைட் ஷர்ட் யும் ஜீன்ஸ் யும் போட்டு அகிலா அழகாக சிரித்து கொண்டு இருந்தாள்.

ஒரு நிமிடம் ஆதி மனதை கட்டுப்படுத்த முடியமால் தடுமாறினான்.

அபியின் அன்னையை பற்றி நினைக்கும் போது ஏன் இந்த சதிகாரியின் முகம் ஞாபகம் வருகிறது??? நாடகக்காரி.... என் வாழ்வை அழிக்க வந்தவள்.... என்னை மட்டும் இன்றி என் குடும்பத்தின் நிம்மதியை அழித்தவள்.

என்றுமே அகிலாவிற்கு அமைதியாக பொறுமையாக பேச தெரியாது....ஆனால், அவளது பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். கோபக்காரி என்று கூட கூறலாம். யாருடைய பேச்சையும் மதிக்கமாட்டாள்.... முதலில் என்னை கூட மதிக்காமல் தானே பேசினால். பின்னர், நான் அவள் வலையில் விழுந்த பின் அமைதியாக மாறினாள். இல்லை இல்லை மாறியதை போல நடித்தாள்.

ஆனால், அபியின் தாய் பேசியதை வைத்தே அவரது இரக்க குணம் ஆதிக்கு புரிந்தது.

வெளிநாடு சென்ற பிறகு கூட இந்த கிராம மக்களுக்கு உதவ நினைக்கிறார். She is really great.... பணத்திற்காக மருத்துவம் செய்யமால் இந்த கிராம மக்களின் நலன் கருதி செய்கிறார். அதுவும் இலவச மருத்துவம் போல.... இது போல நல்ல பெண்களும் இந்த உலகத்தில்

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.