(Reading time: 5 - 10 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

எனக்கு இப்போலா யோசிக்கவே பயமா இருக்கு ஜனனி...

ஏன்டா... ஏதாவது ராட்சத பேய் வருதா கனவில்...

ஜனனனனனினினி....

பின்னே என்னடா... யோசின்னா பயமா இருக்குனு சொல்ற....

இல்லை ஜனனி... சந்தியாகிட்ட கல்யாணம் பற்றி பேசினால் நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு வந்த உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றா.. 

அப்போ இன்னைக்கே ரிசைன் பண்ணிட்டு நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க...

ஜனனி கிண்டல் பண்றியா.. அவதான் புரிஞ்சுக்க மாட்டேங்கிறானா நீயுமா...

அட போடா..‌ அவ என்னடான்னா.. ஊரிலே ஏதாவது தொழில் தொடங்கி நாலு பெண்களுக்கு வேலை கொடுத்து மற்றவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி நம்ம கிராமத்தை மாற்றனும்னு சொல்றா... நீ என்னடான்னா, கஷ்டப்பட்டு உழைத்து இப்போ தான் நல்ல வேலையில் சேர்ந்து இருக்கேன். இங்கே கிடைக்கிற சம்பளத்தை வைத்து அப்பா கடனை அடைக்கனும்... வீடு கட்டனும்.. கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தனும்... சந்தோஷமா வாழனும்னு சொல்ற... நீ சென்னையை விட்டு விட்டு ஊருக்கு போய் வாழ விரும்பவில்லை... அவள் ஊரை விட்டு விட்டு சென்னைக்கு வர விரும்பவில்லை.. இதையே சொல்லி எங்களை வெறுப்பேற்றுறீங்க... இப்படி இழுக்காமல் சட்டு புட்டுன்னு ஒரு முடிவு எடுங்கடா...

ம்ம்ம்...

சசி... 

சொல்லு ஜனனி...

சந்தியா டெய்லரிங், எம்பிராய்டரி வொர்க் பண்ற மாதிரி கடை திறந்து பிஸினஸ் ஸ்டார்ட் பண்ண தயாராகிட்டா.. அவகிட்ட நான் கொஞ்சம் பணம் தரேன்... கொஞ்சம் பெரிய லெவல்ல ஸ்டார் செய்னு சொன்னால் முடியாதுன்னு சொல்றா... நீயாவது சொல்லேன்.. ஒரு ஒருவருடம் கொஞ்சம் கஷ்டப்பட்டால் அப்புறம் அவ பிஸினஸ் ஸ்டெடி ஆகிடும். அதற்கு பிறகு அவளை கன்வீன்ஸ் செய்து சென்னையில் இருந்து அப்பப்போ ஊருக்கு போய் பிஸினஸை பாருன்னு சொல்லி கல்யாணத்தை முடிச்சிடலாம்.

ஜனனி... நீ சொல்லியே கேட்காதவள் நான் சொல்லி கேட்பாள்னு நம்புறியா... உண்மையை சொல்லனும்னா சந்தியா மட்டும் இல்லை.. அம்மா அப்பா அத்தை மாமா யாரும் என்கிட்ட பேசுறது இல்லை.. எப்போ கல்யாணம் பண்ண தயாரா இருக்கியோ அப்போ பேசுனு சொல்லிட்டாங்க..

அப்போ சந்தியா பற்றி உனக்கு எந்த தகவலும் இனி கிடைக்காதுனு சொல்லு...

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.