(Reading time: 8 - 16 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

தினேஷ் இங்கே வா!” அம்மா எப்போதும் இப்படி அவனைக் கூப்பிட்டதில்லை.

“யார் உனக்கு அடிக்கடி கால் பண்றது?”அம்மா கேட்கவும் சற்று அதிர்ந்தான். ஆனால் அந்த அதிர்ச்சியைத் துளியும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,இயல்பான குரலில்,  என்னம்மா கேக்குறீங்க ஒன்னும் புரியலையே!

சும்மா நடிக்காத தினேஷ் இப்போதான் போன்ல ஒரு பொண்ணு  பேசினா! எதோ தமிழ் மன்ற விழா முடிஞ்சு 7 மணிக்கே வீட்டுக்கு வந்துட்டேன்! நாளைக்கு நேர்ல பார்ப்போம்னு சொல்லிட்டு டக்குனு வச்சிட்டா.

யார் போனை எடுக்கிறா என்னன்னு தெரியாம எப்படி இப்படி ஒரு விஷயம் சொல்லியிருப்பா தினம் தினம் பேசிப்  பழகின ஒருத்தர்கிட்ட யதார்த்தமா பேசின மாதிரி தான் இருந்தது

அம்மா எதாச்சும் ராங் காலா இருக்கப் போகுதுமா.

அது ராங் காலா இல்ல நீ தான் ராங் ரூட்ல போயிட்டு இருக்கியா. ஏற்கனவே ஒரு சப்ஜெக்ட் அரியர் வச்சிட்ட. உன் அண்ணன் வேற என்னைத் திட்றான். அவன் என்ன பண்றான்னு கவனிங்கம்மா, உங்க டூட்டிலயே கண்ணுங்கருத்தா இருந்துட்டு அவனைக் கண்டுக்காம விட்ராதீங்கன்னு சொல்லிட்டு இருக்கான். ஸ்கூல் டியூசன் மாதிரி காலேஜ் சப்ஜெக்ட்ஸ் சிலதுக்கும் டியூசன் இருக்காமே. உன்னை அதில சேர்த்துவிடச் சொல்லிட்டு இருக்கான். என்கிட்டே அனுப்பிருந்தா நான் வேலை பாக்கிற காலேஜ்ல என் கண்ட்ரோல்ல அவனை வச்சிருப்பேன்னு சொல்றான். இப்பக்கூட செகண்ட் இயர்ல மாத்தி விடுங்க, நானே கவனிச்சுக்கிறேன்னு கேட்டுட்டு இருக்கான். என்ன நீ வேணா அங்கே போறியா?

அய்யயோ அப்படிலாம் எதுவும் வேணாம்மா. அரியர் இந்த செமெஸ்டர் கண்டிப்பா கிளியர் பண்ணிருவேன்! என்றான் அம்மாவை சமாதானப்படுத்திவாறே, “அவன்கிட்ட மனுஷன் இருப்பானா? ரூல்ஸ் கண்டிஷன்ஸ் தான், அப்புறம் அங்கே இருந்தா என் முட்டக்கண்ணிய நான் எப்படிப் பார்க்கிறதாம் என்றான் முணுமுணுப்பான குரலில்.

என்னடா சொல்ற என் அம்மா மறுபடி கேட்க, பசிக்குதும்மா என்றான்.

சரி  சரி போய் சாப்பிட்டுட்டுப் படு.

பால் இருக்காம்மா? எதுக்குடா? என்ற அம்மாவிடம்

இல்ல, சூடான சாதத்தில் பாலை ஊத்தி நைட்ல சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்னு பிரெண்ட் சொன்னான். ட்ரை பண்ணி பார்க்கலாம்னு தான் கேட்டேன்.

ஏற்கனவே என்னமோ ராப்பகலா கண்முழிச்சி ரொம்ப படிச்சவன் மாதிரி தூக்கம் வர்றதைப் பத்தி பேசிட்டு இருக்க. நீ என்ன சாப்பிட்டாலும் நல்லாவே தூங்கிருவ, நான் கத்திரிக்காய் குழம்பு வச்சிருக்கேன், அதைப் போட்டு சாப்பிட்டுத் தூங்கு. எனக்கு ஷிப்டுக்கு நேரமாகுது, மறக்காமல்

4 comments

  • அம்மாவை மாதிரி டிடெக்டிவ் யாரும் கிடையாது. பிள்ளைங்க கிட்ட சின்ன மாறுதல் இருந்தாலும் பார்த்துட்டே இருப்பாங்க. 8) நன்றி தோழி!
  • :thnkx: தோழி! மாட்டாமல் எத்தனை நாள் தப்பிக்க முடியும்! :lol:
  • Dhineshhhh rombha casual ah suthraru :D avanga Amma enada na palu soru sapidra pillaya illa ninaikuranga 😂😂 kathirika sandhaikku vandhu aunty kuzhambu vachitanga pole :lol: waiting for that the moment....Robin kuda eppadiyo poi tholainganu vittutaru... Interesting update ma'am 👏👏👏👏👏👏<br />Thank you.
  • facepalm maattikondargalo? :Q: yaara irukkum.mudhalil padikkura velaiya paarkka vendiyathu thaane.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.