(Reading time: 8 - 16 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

கதவைப் பூட்டிக்கோ. காலையில சித்திகிட்ட சாவியைக் கொடுத்துட்டு போ.

அம்மா! நீ சாப்பிட்டியா?

இப்போ தானே டா இங்கே உக்கார்ந்து உன் முன்னாடி சாப்பிட்டேன்! கவனிக்கலையா?

சாப்பிட்டியான்னு நம்மளை யாராச்சும் கேட்டா  அந்த ஃபீல்  நல்லாயிருக்குல அம்மா?

தினேஷா! நீ ஒன்னும் சரியில்லடா! என்னிக்கும் இல்லாத திருநாளா சாப்பிட்டியான்னு என்கிட்டே கேக்குற! என்னமோ நடக்குது! இரு என்னனு வந்து உன்னை கவனிக்கிறேன்! என்றவாறே கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

மறுநாள் தினேஷின் கிளாஸுக்கு கையில் ஒரு சாக்லேட்டுடன் சென்ற ரம்யா, ராபினைப் பார்த்துத் திகைத்து நின்றாள். “பயப்படாத உள்ளவா! அவனுக்கு எல்லாம் தெரியும்!” என்றான் தினேஷ்,” நான் என்ன சொல்லி நீங்க என்ன கேக்கப்போறீங்க? என்னவோ போய் தொலைங்க!”, சலிப்புடன் ராபின் வகுப்பை விட்டு வெளியேற, சிறு புன்னைகையுடன் அந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள், சாக்லேட் ரேப்பர் ஓப்பனாகித் தான் இருக்கு, நான் ஒரு சின்ன பைட் எடுத்துக்கிட்டேன். நீங்க சாப்பிட்டு முடிச்சதும் அந்த ரேப்பரைக் கீழ போட்றாதீங்க. உள்ள என்ன இருக்குன்னு பாருங்க! என்று சொல்லிவிட்டு ரம்யா கிளம்பினாள்.

“என்ன உள்ளே இருக்கும் என்ற ஆவலில், மீதி சாக்லேட்டை சுவைத்தவன், அதன் தாளைப் பிரித்தான். அதில் நன்கு மடிக்கப்பட்ட ஒரு சிறிய துண்டுக் காகிதம் இருந்தது. பிரித்துப் படித்தான். “தினேஷ்! உன்னை எப்படா முதன்முறையாகப் பார்த்தேன்?ஸ்கூல்ல இருந்தே உன்னைத் தெரியும்னு தோணுது. ஆனால் நான் படிச்சது கேர்ள்ஸ் ஸ்கூல் ஆச்சே அப்புறம் எப்படி? எப்பயாவது எங்கயாவது உன்னைப் பார்த்திருப்பேனோ?பஸ்ல?ட்ரெய்ன்ல? இல்ல எதாவது ஒரு இடத்துல? சின்ன வயசுல உங்க ஊர் பக்கத்துல இருக்கிற டேமுக்குப் பிக்னிக்  வந்தேன். ஒருவேளை உன்னை அங்கே தான் பார்த்திருப்பேனா? எங்க ஊர் பெருமாள் கோவில் தேரோட்டத்துக்கு லட்சக்கணக்கான பேர் வருவாங்களே,அதில நீ மட்டும் என் கண்ணுக்குத் தெரிஞ்சியோ? உன்னை இப்போ தான் தெரிஞ்ச மாதிரியே தோணல பல வருஷமா தெரிஞ்ச மாதிரியே இருக்கு! ஏண்டா? போடி லூஸு! விட்டால் நீ முன் ஜென்மத்துல இருந்தே தெரியும்னு சொல்லுவ போலேயே! நீ கேக்கறது கரெக்ட் டா! போன ஜென்மத்துல ம்ஹூம் அதுக்கும் முந்தின ஜென்மத்துல என் நிறைய பிறவிகளிலும் உன்னைப் பார்த்திருக்கேன். உன் மேல பைத்தியமா இருந்திருக்கேன். அதான்டா, உன் முகம் எனக்குப் புதுசாவே தெரியல. என் இதயத்துக்கு ரொம்ப நெருக்கமான முகமாகவேத் தெரிஞ்சது. நீயும் என்னைத் தேடி வர அதான்டா காரணம். நான் உன் முகத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்காமல் தவிர்த்ததே நான் சலனப்பட்டு என் அம்மா அப்பாவுக்கு செய்து கொடுத்த வாக்குறுதிகளை மீறிடக் கூடாதுன்னு

4 comments

  • அம்மாவை மாதிரி டிடெக்டிவ் யாரும் கிடையாது. பிள்ளைங்க கிட்ட சின்ன மாறுதல் இருந்தாலும் பார்த்துட்டே இருப்பாங்க. 8) நன்றி தோழி!
  • :thnkx: தோழி! மாட்டாமல் எத்தனை நாள் தப்பிக்க முடியும்! :lol:
  • Dhineshhhh rombha casual ah suthraru :D avanga Amma enada na palu soru sapidra pillaya illa ninaikuranga 😂😂 kathirika sandhaikku vandhu aunty kuzhambu vachitanga pole :lol: waiting for that the moment....Robin kuda eppadiyo poi tholainganu vittutaru... Interesting update ma'am 👏👏👏👏👏👏<br />Thank you.
  • facepalm maattikondargalo? :Q: yaara irukkum.mudhalil padikkura velaiya paarkka vendiyathu thaane.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.