மனம் அங்கும் இங்கும் மாறி மாறி பேச ஜனனியின் தலைவலி அதிகமாகியது. சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தவள் இஞ்சி டீ தயார் செய்தாள்.
ஆனால் அவள் மனம் முழுவதும் மாதா கோயில் வாசலில் நடைபெற்ற உரையாடலில் கலந்து குழம்பி இருந்தது.
தினமும் டீ போடுவது வழக்கம் என்பதால் கவனம் இல்லாத அந்த நிலையிலும் தேநீரை தயார் செய்து முடித்திருந்தவள் அதை கோப்பைக்கு மாற்றி கொண்டு அமர்ந்தாள்.
அந்த நேரத்தில் அவள் மொபைல் அழைக்க எடுத்து பார்த்தவள் அழைப்பது ஸ்வீனா என்று தெரிந்ததும் யோசனையுடன் அழைப்பை ஏற்றாள்.
அழைப்பை ஏற்றதும் நலம் விசாரிப்பு முடிய தான் அழைத்த காரணத்தை விளக்கினாள் ஸ்வீனா.
ஜனனி... அண்ணாவும் பிஸினஸ் விஷயமா புனே கிளம்பிட்டாருல.. உன்கிட்ட தான் சொல்லி இருப்பாரே... திரும்பவும் நான் சொல்லிக் கிட்டு என்று தனக்குத்தானே சொல்லி கொண்டவள் ஜானு... உனக்கு முடிந்தால் நீ ஆபிஸ் போறியா என்றாள்.
அவள் இருந்த குழப்பமான சூழ்நிலையில் வேறு எதுவும் பேசாமல் சரி... என்றாள்.
அவளின் சம்மதத்தை கேட்டதும் ஓகே ஜனனி, நானும் இங்கே கொஞ்சம் வேலையா இருக்கேன்... அப்புறம் பேசுகிறேன் என்று சொல்ல ஜனனியும் ம்ம்ம் என்றாள்.
அழைப்பை கட் செய்ய தன் விரலை வைக்க அந்த நொடி நான் அவளிடம் சொல்லவில்லை என்ற ஜனாவின் குரல் கேட்க அதற்குள் ஜனனியின் விரல் பட்டு அழைப்பு துண்டிக்கப்பட ஜனனியின் இதயமும் துண்டாக்கப்பட்டது போல இருந்தது.
தேநீர் ஆறி போய் சுவை இல்லாதது போல தோன்றியது. விருப்பமில்லாமல் தேநீர் கோப்பையை அகற்றியவளுக்கு தன் வாழ்க்கையும் இதே போல ஒதுக்கி வைக்கப்பட்டது போல தோன்றியது.
வலிகள் பல சந்தித்ததால்
வலிமை பெற்ற இதயம்
மனம் கவர்ந்தவன் தந்த வலியின் முன்
மண்டியிட்டு அழுதது...
வலிமைகள் எல்லாம்
வலிகள் ஆக மாறி அழுத்தியது...
மனம் ஒரு குரங்கு...
குரங்கு சேட்டையை சில நேரம் கண்டு ரசிக்கலாம்...
Kovathula janani enna solli vaika poralo
Thank you