(Reading time: 10 - 19 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“அம்மா மட்டும்தான் இருக்காங்க!...அதுவும் முதியோர் இல்லத்துல” சோகமாய்ச் சொன்னான்.

“ஏங்க?...உங்க கூடவே வெச்சுக்க வேண்டியதுதானே?” சிறிய கோபத்தோடு சொன்னாள் வத்சலா.

“ஹும்...நான் பார்க்கிறது மார்க்கெட்டிங் வேலை!...மாசத்துல இருபது நாள்...இருபத்தியஞ்சு நாள் வெளியூர்ல கிடப்பேன்...!...அம்மாவோ பிரஷ்ஷர் பேஷண்ட்!...சரியான கவனிப்பு வேணும்!...அதான்...முதியோர் இல்லமே பெட்டர்!னு அங்க சேர்த்து விட்டுட்டேன்!...” என்றான்.

அதை ஏற்காதது போல் வத்சலா முகச்சுளிப்போடு அவனைப் பார்க்க, “இங்க பாருங்க முதியோர் இல்லம் என்பது எல்லா நேரங்களிலேயும் கொடுமையான விஷயம் இல்லைங்க!...சில நேரங்கள்ல சில மூத்த பறவைகளுக்கு அது ஒரு  “சரணாலயம்”ங்க!...நான் ஒண்ணு கேட்கிறேன்...ஒருவேளை நான் எங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்காம என்னோடவே வெச்சிருந்தா அவங்க நிலைமை எப்படியிருக்கும்?...தனிமை அவங்க மன ஆரோக்கியம்...உடல் ஆரோக்கியம் ரெண்டையுமே பாதிச்சு!...அவங்க ஆயுளையே குறைச்சிருக்கும்!...இப்ப அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க தெரியுமா?...சரியான நேரத்துக்கு பத்தியச் சாப்பாடு...மருந்து..மாத்திரை கவனிப்பு!...பேச்சுத் துணைக்கு சக முதியோர்கள்!...போரடிச்சா டி.வி., பொழுதுபோக புத்தகங்கள்!..இப்படி எல்லா வசதிகளும் “ஜம்”முன்னு இருக்கு!”

“ஓ.கே...அவங்க சந்தோஷமா இருந்தா சரி” என்றாள் வத்சலா.

“ஆமாம்...என்கிட்டே ஏதோ விஷயம் பேசணும்னு சொன்னிங்களே?...என்ன?” ரவீந்தர் கேட்டான்.

“வந்து...இன்னிக்குக் காலைல நீங்க ஆபீஸுக்குப் போகும் போது, நான் இங்க...அந்தக் கீரைப் பாத்திக்குப் பக்கத்தில்தான் இருந்தேன்!...” வதசலா தயக்கமாய்ச் சொல்ல,

“ம்..தெரியும்...நான் பார்த்தேனே?... “குட்மார்னிங்” சொல்லலாம்!னு வந்தேன்...அதுக்குள்ளார நீங்க போயிட்டீங்க!...எனக்கு கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.... “என்னடா...நம்மைப் பார்த்தும்....பார்க்காதது மாதிரிப் போயிட்டாங்களே?”ன்னு..அப்புறம்... “சரி...அவங்களுக்கு என்ன வேலையோ?”னு நெனைச்சு என்னை நானே கன்வின்ஸ் பண்ணிக்கிட்டு ஆபீஸ் போயிட்டேன்”

“ஸாரிங்க!...”என்றவள், “உண்மையைச் சொல்லணும்ன்னா நான் வேணுமின்னேதான் போயிட்டேன்!”

“ஏன்?...என் மேல் ஏதாச்சும் கோபமா?”

“அய்யய்ய...உங்க மேல் என்ன கோபம்?...ம்ஹ்ஹும்...எனக்கு உங்க மேல் கோபமே வராது!” என்று வெட்கத்தோடு சொல்ல,

“அப்புறம் ஏன் என்னைக் கண்டுக்காமப் போனீங்க?”

“காலை நேரத்துல ஒரு ஆம்பளை...ஆபீஸுக்குக் கிளம்பிப் போகும் போது எதிர்ல ஒரு சுமங்கலி வந்தா அது நல்ல சகுனம்!...என்னை மாதிரி ஒரு விதவை வந்தா...?” கொக்கி போட்டு

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.