(Reading time: 10 - 20 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 09 - தனுசஜ்ஜீ

த்தவெள்ளத்தில் அனிதாவை கண்டவன் உடலும் உள்ளமும் பதற.....தன் நடுங்கும் கரங்களால் அவளை தூக்கினான். எதற்கும் கலங்காத அந்த ஆண்மகனது கண்ணில் கண்ணீர் ஆறாக பெருகிற்று.

அனி.... அனி.... அவன் பெருங்குரல் எடுத்து கத்தி..... கை, கால்கள்  நடுங்க அவளை உலுக்கினான். என்ன ஏமாத்திட்டு போயிராத அனிதா...ஐயோ கடவுளே நான் என்ன பண்ணுவேன். என்று நடுரோட்டில் பைத்தியக்காரன் போல் பிதற்றிக் கொண்டிருந்தான். அங்கு கூடியிருந்தவர்கள் தான் முதலில் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போப்பா......எனக் கூற,

உடனே அவளை தூக்கி கொண்டு காரை நோக்கி ஓடினான்.உனக்கு ஒன்னும் ஆகாது அனிதா..... உனக்கு ஒன்னு ஆக நான் விடமாட்டேன். நான்  ஒரு பாவிடி என்னாலதான் உனக்கு இப்படி ஆயிடுச்சு... நீ கவலைப்படாதடி நான் உனக்கு ஒன்னும் ஆகாம பத்திரமாய் கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்து காப்பாத்துவேன் சரியா.... எங்க என்ன பாருடி..... நான் நல்லாயிருக்கே செல்லுடி .....இங்க பாரு இங்க பாரு உன் பக்கத்துல தான் நான் இருக்கேன். நான் உன்னை என் உயிராக நேசிக்கிறேன் அனி நான் வீட்டில சொன்னது உண்மை கிடையாது அது நான் சும்மா சொன்னே......கண்ண திறந்து என்னை பாருடி...... என்ன பழிவாங்கத அனி உன்ன கெஞ்சி கேட்கிறேன் பிளீஸ்டி. உன் கதிர் உன்ன ஏமாத்துவானா??? அவளை மடியில் கிடத்தி கதறிக்கொண்டே வண்டி தாறுமாறாக ஓட்டி சென்றான். நல்ல வேளையாக எந்த சேதாரமும் இல்லாமல் அருகிலுள்ள மருத்துவமனையை அடைந்தான்.

டாக்டர்......டாக்டர் ....என மருத்துவமனையே அலறும் அளவிற்கு இவனது அலறல் இருந்தது.

ஸ்ட்ரெச்சர் உடன் வெளியே வந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அனிதாவை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி ஐசியு பிரிவுக்கு அழைத்து சென்றனர். இவனும் அவள் பின்னே பைத்தியக்காரன் போல் செல்ல ஐசியூ உள்ளே நுழையும்பொழுது, நர்ஸ்அவனை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு அவளை அவசர சிகிச்சை பிரிவு உள்ளே அழைத்துச்சென்றனர் அடுத்த நிமிடம் அந்த மருத்துவமனையின் உள்ளே இரண்டு மூன்று மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளே நுழைந்தனர்.

     வெளியே வந்த செவிலியர்  சார் ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துருங்க. நீங்க கவலைப்படாதீங்க நாங்க ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிருவோம்.ஆனா பிரசிஜர் ஒன்னு இருக்குல்ல சார். அவுங்க ரொம்ப க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் ல தான் இருக்காங்க நீங்க உடனே போய் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துருங்க நீங்க கவலைப்படாதீங்க கம்ப்ளைன்ட் கண்டிப்பா எடுத்துப்பாங்க ஏன்னா உள்ள இருக்க டாக்டருடைய ஹஸ்பெண்ட் தான் ஸ்டேஷன்ல இருக்காங்க.ரொம்ப எமர்ஜன்சி சொல்லுங்க சார்.

13 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.