(Reading time: 10 - 20 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

அவள் சவுகரியமாக அமர்ந்திருப்பதை கண்டவன்.

கம்ஃபர்டபுள்ளா உட்காருங்க தேன்மொழி சீக்கிரம் போய்டலாம்.

அவள் சிரித்து சரி என்பதுபோல் தலையாட்டினாள்.ஆனால் மனதிற்குள் ஆயிரம் கேள்வி அனிதா எங்க போனா... அவ இது மாதிரி பண்ண மட்டாளே.... என்ன நடந்தாலும் கரெக்டா ஸ்கூலுக்கு போய் ஸ்வேதாவ கூட்டிட்டு வந்திடுவாளே...... போன் கூட எடுக்கல என்ன ஆயிருக்கும் வீட்ல தானே இருக்கேன்னு சொன்னா....என அவள் ஆயிரம் சிந்தனையில் வர...

கார்த்திக்கிற்கும் அதே மனநிலைதான் அனிதா எங்க இருக்காங்க.  கதிர் கூடதான் இருக்காங்களா... கதிர் வேற எதுவுமே சொல்ல மாட்டுறான். வீட்ல தான் இருக்காங்களா போன் பண்ணாலும் நாட் ரீச்சபிள் வருது என்று ஆயிரம் கேள்விகள் இவனது தலையையும் தின்றது.

 பள்ளியை அடைந்த உடனே தேன்மொழி விரைந்து பள்ளியை நோக்கி சென்றாள் அங்கு ஸ்வேதா அழுதபடி அமர்ந்து இருக்க... அருகில் ஒரு ஆசிரியர் நின்றுகொண்டிருந்தார்.

நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் ஓடிச்சென்று ஸ்வேதாவை தூக்கிக்கொண்டு அருகிலிருந்த ஆசிரியருக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தான். இதனை தூரத்திலிருந்து கார்த்திக் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது அதை எடுத்துப் பேசியவர் முகம் பேயறைந்தது போலானது.

  உடனே தேன்மொழியை நெருங்கியவன். நம்ம போகலாமா தேன்மொழி என்று கூற,

அந்த ஆசிரியரிடம் விடைபெற்று அவனுடன் சென்றாள். கார்த்திக் தேன்மொழியிடம் எதுவும் கூற முடியாது நேராக வண்டியை அனிதாவை அட்மிட் செய்திருக்கும் மருத்துவமனையை நோக்கி விட்டான்.

   ஸ்வேதாவின் அழுகையை சரி செய்வதிலேயே கவனமாக இருந்தவள். அப்போதுதான் பாதையை கவனித்தாள் வண்டி வேறு வழியில் சென்று கொண்டிருக்க..... சார் நாம இப்ப எங்க போயிட்டு இருக்கோம் என்று கேட்க.....

அவளைப் பார்த்தவன் எச்சிலை விழுங்கிவிட்டு, அனிதாவை பார்க்க என்று மொட்டையாக கூறினான்.

அவள் மனதில் பயபந்து உருள, அனிதாக்கு என்னாச்சு....என்று கேட்டாள்.அவளது குரலிலேயே அவளுடைய பயம் தெரிந்தது.

அவளை தற்போது சரியாக்கும் பொருட்டு ஒன்னும் இல்ல. நாம கொஞ்சம் சீக்கிரம் போகணும் என்று மட்டும் கூறி விட்டு காரை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.

இவனுடைய முகமும் இவன் வண்டி செலுத்தும் வேகமும் விஷயம் விபரீதம் என்பதை அவளுக்கு சொல்லாமல் சொல்லியது.

13 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.