(Reading time: 10 - 19 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 11 - முகில் தினகரன்

மாலை.  அலுவலக ஊழியர்களெல்லாம் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.  ரவீந்தர் மட்டும் இன்னமும் பிஸியாக இருந்தான். “என்ன சார் கிளம்பலையா?” காவ்யா தோளில் பேக்குடன் வந்து கேட்டாள்.

“இல்லைங்க மேடம்!...அடுத்த வாரத்திற்கான பிசினஸ் டூர் புரோக்ராம் போட்டுட்டிருக்கேன்!...நிறைய கம்பெனிகள்ல பேசி...அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டியிருக்கு!...அதான் லேட்டாகுது” என்றான் ரவீந்தர்.

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?” கண்களில் மத்தாப்புக்களை வைத்துக் கொண்டு கேட்டாள் காவ்யா.

“நோ தேங்க்ஸ்!...உங்களுக்கு இன்னிக்குத்தான் முதல் நாள்...முதல் நாளே லேட்டாக வேண்டாம்!...நீங்க கிளம்புங்க!...” என்றவன், “அது செரி....திடீர்னு பொள்ளாச்சிக்கு வந்திட்டீங்களே?...இங்க எங்க தங்கிட்டிருக்கீங்க?” கேட்டான்.

“லேடீஸ் ஹாஸ்டல்”

“ஓ...அது எங்க இருக்கு?” லாப்டாப்பில் கண்களைப் பதித்துக் கொண்டே கேட்டான்.

“ரயில்வே காலனியில் இருக்கு...ஏன் வர்றீங்களா?” காவ்யா நக்கலாய்க் கேட்டாள்.

“அய்யய்யோ...எனக்கு சின்ன வயசிலிருந்தே லேடீஸ் ஹாஸ்டல்ன்னா பயம்” என்றான் அவனும் நக்கலாய்.

“ஏன்?”

“அது...வந்து...”அவன் தயங்க,

“பரவாயில்லை சொல்லுங்க!” சிரித்துக் கொண்டே கேட்டாள் காவ்யா.

“சின்ன வயசாயிருக்கும் போது...பசங்களோட சேர்ந்து...எங்க ஊர் தியேட்டர்ல “லேடீஸ் ஹாஸ்டல்”ங்கற மலையாளப் படம் காலைக் காட்சி பார்த்தேன்...அதிலிருந்து லேடீஸ் ஹாஸ்டல்ன்னாலே..ஒரு...இது” வெட்கத்துடன் சொன்னான்.

“எது?” கழுத்தைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள்.

“ம்ம்ம்..பயம்ன்னு வெச்சுக்கங்க” என்றான்.

“இப்பவும் அந்த மாதிரி மலையாளப்படம் பார்க்கிற வழக்கமுண்டா?” கண்ணடித்துக் கேட்டா காவ்யா.

“அய்ய...என்னங்க?...அது அறியாத வயசு...புரியாத வயசு...இப்ப அப்படியா?”

“ஓ.கே.பை...இன்னிக்கு மறக்காம அந்த பேப்பரைப் படிச்சிட்டு நாளைக்கு வந்து சொல்லுங்க” போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனாள் காவ்யா.

அவள் சென்ற இரண்டாம் நிமிடம், கையில் பேக்குடன் கோகிலா வந்தாள்.  “என்ன

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.