This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“என்ன சிவா முகமெல்லாம் எப்படியோ இருக்கு? அஞ்சு நிமிஷமாவது தூங்குனீயா இல்லையா?” – தீபக்.
“எங்கே இருந்து தூங்குவான் அபி? அவன் தான் காதல்ன்னு புதைக்குழியில போய் விழுந்துட்டானே. இனிமேல் தூக்கம் கிடையாது, சந்தோஷமும் கிடையாது. ஒன்லி சோக கீதம்ஸ்.” – அபிலாஷ் நண்பனை கிண்டல் செய்தான்.
“அபிலாஷ் நீ வாயை மூடு. சிவா நீ சொல்லு, தூங்குனீயா இல்லையா?” – தீபக்.
சிவக்குமார் இல்லை என்று தலை ஆட்டினான்.
“எதுக்கு சிவா தூங்காம இருந்து உடம்பை கெடுத்துக்குற? நான் தான் ராமசாமி சார் கிட்ட பேசி உன் கல்யாணத்தை நடத்துறேன்னு சொல்லிட்டேனே?” – தீபக்.
நண்பவர்கள் மூன்றுப் பேரும் காஃபி டம்ப்ளரும் கையுமாக அந்த பழைய கிராமத்து வீட்டை சுற்றி இருந்த தோட்டத்தில் இருந்தார்கள்.
அவர்கள் மூவரும் அங்கே வருவதற்கு முன்பே கோபால் மொபைல் சிக்னலுக்காக அங்கே வந்திருந்தான். அவன் ஒரு மரத்திற்கு பின்னே நின்றுக் கொண்டிருந்ததால் நண்பர்கள் கண்ணில் அவன் படவில்லை.
கோபாலும் வெளியே வந்து அவன் அங்கே நிற்பதை காட்டிக் கொள்ளவில்லை. இருக்கும் இடத்தில் மறைவாக நின்று நண்பர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை ஆர்வத்துடன் ஒட்டுக் கேட்டான்.
சிவக்குமார் தீபக்கின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே நின்றுக் கொண்டிருந்தான்.
“டேய் சிவா, உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்? கேள்வி கேட்டு முடிக்குறதுக்கு முன்னாடி பட்டு பட்டுன்னு பதில் சொல்வ? எதுக்கு இன்னைக்கு இப்படி முழிச்சுட்டு நிக்குற?” – தீபக்.
“தீபக், இந்த கேள்விக்கு பதிலை நான் முன்னாடியே சொல்லிட்டேன். எதுக்கு திரும்ப திரும்ப கேட்குற? உனக்கும் பாரதிக்கும் கல்யாணம் பேசுனப்போ நீயும் இப்படி தான் கிராக்கு மாதிரி நின்னுட்டு இருப்ப.” – அபிலாஷ் கிடைத்த வாய்ப்பில் இரண்டு நண்பர்களையும் ஒன்றாக கிண்டல் செய்தான்.
“அபி, இன்னொரு தடவை நடுல பேசினா, டக்ட் டேப் எடுத்து வந்து உன் வாயில ஒட்டி விட்ருவேன்.” – தீபக் அபிலாஷை மிரட்டி விட்டு சிவக்குமார் பக்கம் பார்வையை திருப்பினான்.
“சிவா, என்ன உனக்கு பிரச்சனை? வாயை திறந்து சொல்லு.”
“தீபக், நீ சொல்றதுப் போல ராமசாமி சார் சம்மதம் சொல்லி எனக்கும் மேனகாக்கும் கல்யாணம் நடந்தா அவளுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு நான் எப்படி
Abhi nalla sonnaru.... vivekananda sir oda disciple range la ninaicharame
Hopefully siva-va apsarakk parthenu sollamal irundhal nalladhu
Thank you